ஒரு ரோமானியப் மூதாட்டி 3.5 கிலோகிராம் எடையுள்ள சிவப்புக் கல்லை பல பத்தாண்டுகளாக வீட்டு கதவு ஓரம் வைக்க பயன்படுத்தி வந்துள்ளார். அவரது மரணத்திற்குப் பிறகு, அது உலகின் மிகப்பெரிய ‘ரூமனைட்’ ரத்தினம் என்று கண்டறியப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய அம்பர் துண்டு என்றும் இதனுடைய மதிப்பு சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் ரூ.8.49 கோடி ஆகும்.
ரோமானியாவில் ஒரு மூதாட்டி தன்னுடைய வீட்டின் கதவு ஓரம் வைக்க 3.5 கிலோ எடையுள்ள ஒரு சிவப்புக் கல்லை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தார். அவரின் மறைவுக்குப் பிறகு, அந்த கல் உண்மையில் உலகின் மிகப்பெரிய அம்பர் ரத்தினம் ‘ரூமனைட்’ ரத்தினம என்று கண்டறியப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ரூ.8.49 கோடி (1 மில்லியன் அமெரிக்க டாலர்) என கூறப்படுகிறது.
இந்த ரூமனைட் ரத்தினம் என்பது பழமையான மரங்களின் பிசின்களில் இருந்து உருவான அம்பர் ரத்தினம், இது வரலாறு மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ரூமனைட் எனப்படும் இந்த மிகவும் அரிய சிவப்பு வகை அம்பர் ரத்தினம் முக்கியமாக ரோமானியாவின் கோல்ட்சி கிராமத்திலேயே கிடைக்கிறது.
அந்த மூதாட்டி பல ஆண்டுகளுக்கு முன்பு தனது கிராமம் அருகிலுள்ள ஓடையின் கரையில் இந்த கல்லைக் கண்டெடுத்துள்ளார். அதன் மெருகான தோற்றம் மற்றும் அழகிய நிறம் அவரைக் கவர்ந்ததால், அதை வீட்டிற்கு கொண்டு வந்து கதவு ஓரம் வைக்கும் கல்லாகப் பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால், அந்த கல்லின் உண்மையான மதிப்பு அவருக்குத் தெரியாமல் பல ஆண்டுகள் கழிந்துவிட்டது.
1991-ம் ஆண்டு அந்த மூதாட்டி மறைந்த பிறகு, அந்த வீடு அவரது உறவினர் ஒருவருக்கு கொடுக்கப்பட்டது. அவர் அந்த கல்லின் தனித்துவத்தை கவனித்து அதைப் பற்றி ஆராய்ந்தார். பின்னர் அது ரோமானிய அரசுக்கு விற்கப்பட்டது. கிரகோவின் வரலாற்று அருங்காட்சியக நிபுணர்கள் அதை ஆய்வு செய்து, அது 38 முதல் 70 மில்லியன் ஆண்டுகள் பழமையானது மற்றும் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய அம்பர் ரத்தினங்களில் ஒன்று என உறுதி செய்தனர்.
அந்த மூதாட்டி வாழ்ந்த காலத்தில், ஒரு முறை திருடர்கள் வீட்டைச் சூறையாடியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் கதவின் முன் வைக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய சிவப்பு கல்லின் முக்கியத்துவத்தை உணராமல் நகைகளை மட்டும் திருடிச் சென்றுள்ளனர். “அவர்கள் எளிதாகக் கண் முன்னே இருந்த அம்பர் ரத்தினத்தைக் கவனிக்காமலேயே தப்பிச் சென்றனர்” என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இப்போது, அண்த ரூமனைட் ரத்தினக் கல் புசாவின் மாகாண அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. "இது வரையறையற்ற மதிப்புள்ள ஒரு வரலாற்று ஆவணம்," என்று அருங்காட்சியக இயக்குனர் டேனியல் கோஸ்டேச் தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக கதவு அருகே வைக்கப் பல ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட கல் இன்று உலகின் மிகவும் அரிய ரத்தினமாக உயர்ந்துள்ளது. இது ஊடகங்களில் செய்தியாக வெளியாகி உலகை வியக்க வைத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.