New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/01/Untitled-4.jpg)
RPF constable saves elderly passenger
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவ, பெரும் பாராட்டை பெற்றுள்ளார் கான்ஸ்டபிள் ஹரிஷா
RPF constable saves elderly passenger
RPF constable saves elderly passenger : ரியல் ஹீரோக்களை அடையாளம் காண்பது மிகவும் எளிது. அவர்கள் அனைவரும் சீருடையில் தான் இருப்பார்கள் போல். தற்சமயம் அந்த ஹீரோவை பெங்களூரு ஹோசபேட்டை ரயில் நிலையத்தில் சந்திக்கலாம்.
ஞாயிற்றுக் கிழமையன்று மதியம் 2 மணி அளவில், ரயில்வே ட்ராக்கிற்கும் ரயிலுக்கும் நடுவில் சிக்கிக் கொண்ட வயது முதிர்ந்த ஒருவரை காப்பாற்றி உள்ளார் ரயில்வே காவற்படை வீரர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவ, பெரும் பாராட்டை பெற்றுள்ளார் கான்ஸ்டபிள் ஹரிஷா.
ஹொசப்பேட்டை ரயில்வே நிலையத்தில், ஒன்றாம் நம்பர் ப்ளாட்பாரத்தில் இருந்து ஹொசப்பேட்டை - கே.எஸ்.ஆர் பெங்களூரு 56910 என்ற வண்டி நகரத்தொடங்கியது. அப்போது 55 வயதான கௌரவ் ரயிலில் ஏறும்போது இடறி கீழே விழுந்தார்.
மிக துரிதமாக செயல்பட்ட ஹரிஷா, பிளாட்பாரத்திற்கும் ஓடும் ரயிலுக்கும் நடுவில் மாட்டிக் கொண்ட கௌரவை தூக்கி காப்பாற்றினார்.
At the time of departure of Train No. 56910 KSR Bengaluru Passenger from Hosapete Railway Station on 20.01.2019, Shri Harisha. C Constable/Hosapete on duty rescued a old aged passenger who falling under the wheels as he slipped & had lost balance from running train. pic.twitter.com/fpt92nMe5A
— SouthWestern Railway (@SWRRLY) 21 January 2019
சதர்ன் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. கான்ஸ்டபிளின் இந்த துணிவு மிக்க செயலை மக்கள் பாராட்டி வருகின்றார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.