இரண்டு ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) பணியாளர்களின் விரைவான மற்றும் சரியான நேரத்திலான செயல்பாடு, சமீபத்தில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையிலான இடைவெளியில் விழுந்த ஒருவரின் உயிரைக் காப்பாற்ற உதவியது.
இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகளை RPF இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிறகு, இரண்டு அதிகாரிகளான RPF உதவி சப்-இன்ஸ்பெக்டர் (ASI) அருண்ஜித் மற்றும் பெண் தலைமை கான்ஸ்டபிள் PP மினி ஆகியோரின் துணிச்சலுக்கும் தைரியத்திற்கும் எல்லா பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்கள் கிடைத்தன.
அந்த நபர் நடைமேடைக்கும் தண்டவாளத்துக்கும் இடையே உள்ள இடைவெளியில் தவறி விழுந்தவுடன், பயணிகள் அங்கு திரண்டு வந்து அவருக்கு உதவ முயன்றதை சி.சி.டி.வி காட்சிகள் காட்டுகிறது. இதை கவனித்த இரு அதிகாரிகளும் நேரத்தை வீணடிக்காமல் அவரை மீட்டு சில நொடிகளில் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.
ட்விட்டரில், ஆர்.பி.எஃப் இந்தியா கூறியது: “வீரம் மற்றும் தைரியத்தின் மற்றொரு கதை! #Everydayheroes RPF ASI அருண்ஜித் & லேடி HC P.P. மினி ஆகியோர் கோயம்புத்தூர் ஸ்டேசனில் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் சிக்கிக் கொண்ட ஒரு பயணியை, தங்கள் பாதுகாப்பை முற்றிலும் பொருட்படுத்தாமல், அவரை காப்பாற்றி மீண்டும் நடைமேடைக்கு கொண்டுவந்தனர்.”
காவல்துறை அதிகாரிகளின் முயற்சிக்கு நெட்டிசன்களும் பாராட்டு தெரிவித்தனர். "மனிதநேயத்திற்கான சிறந்த வேலை. நன்றாக முடிந்தது. வாழ்த்துக்கள்.” என்று ட்விட்டர்வாசி எழுதினார். மற்றொரு பயனர், "மிகப்பெரிய வேலை முடிந்தது. தொடர்ந்து செயல்படுங்கள்." என்று எழுதினார்.
சமீபத்தில், தமிழ்நாட்டின் விருத்தாசலம் ஸ்டேஷனில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரயிலில் ஏறுவதற்கு உதவிய மற்றொரு ஆர்.பி.எஃப் வீரர் மனதை வென்றார். ஆர்.பி.எஃப் எஸ்.ஐ சரவணன், அந்த நபரை அவரது பெர்த்துக்கு ஏற்றிச் சென்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil