டெல்லி ரயில் நிலையத்தில் கையில் குழந்தையுடன் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பெண் காவலர்: வைரல் வீடியோ

இந்த வைரல் வீடியோவில், ரயில்வே பாதுகாப்பு படை சீருடையில் இருக்கும் கான்ஸ்டபிள் ரீனா, தனது குழந்தையுடன் மார்பில் இணைக்கப்பட்ட கேரியரில் ரயில்வே பிளாட்பாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதைக் காட்டுகிறது.

author-image
WebDesk
New Update
RPF woman constable

ரயில்வே பாதுகாப்பு படை சீருடையில் இருக்கும் கான்ஸ்டபிள் ரீனா, தனது குழந்தையுடன் மார்பில் இணைக்கப்பட்ட கேரியரில் ரயில்வே பிளாட்பாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்.

இந்த வைரல் வீடியோவில், ரயில்வே பாதுகாப்பு படை சீருடையில் இருக்கும் கான்ஸ்டபிள் ரீனா, தனது குழந்தையுடன் மார்பில் இணைக்கப்பட்ட கேரியரில் ரயில்வே பிளாட்பாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதைக் காட்டுகிறது.

Advertisment

அண்மையில், டெல்லி ரயில் நிலையத்தில் நடந்த கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிறகு, சீருடையில் இருக்கும் ரயில்வே பாதுகாப்பு படையின் பெண் கான்ஸ்டபிள் ரீனா, கையில் தனது குழந்தையுடன் டெல்லி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படையின் பெண் காவலர் ரீனா சமூகவலைதளங்களில் கவனத்தைப் பெற்று வருகிறார். 

ஆர்.பி.எஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம், கான்ஸ்டபிள் ரீனாவின் வீடியோவைப் பகிர்ந்து, தனது குழந்தையைத் தூக்கிக்கொண்டு தனது கடமைகளைச் செய்ததற்காக அவரைப் பாராட்டியது.

இந்த வைரல் வீடியோவில், சீருடையில் இருக்கும் கான்ஸ்டபிள் ரீனா, தனது குழந்தையுடன் மார்பில் இணைக்கப்பட்ட கேரியரில் பிளாட்பாரத்தை ஆய்வு செய்வதைக் காட்டுகிறது.  “அவர் சேவை செய்கிறார், குழந்தையை வளர்க்கிறார், எல்லாவற்றையும் செய்கிறார் - ஒரு தாய், ஒரு போர்வீரர், நிமிர்ந்து நிற்கிறார்... 16BN/RPSF-ஐச் சேர்ந்த கான்ஸ்டபிள் ரீனா, தனது குழந்தையை சுமந்து கொண்டு தனது கடமைகளைச் செய்கிறார், ஒவ்வொரு நாளும் தாய்மையுடன் கடமையின் அழைப்பை சமநிலைப்படுத்தும் எண்ணற்ற தாய்மார்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்” என்று ஆர்.பி.எஃப் இந்தியா பாராட்டியுள்ளது.

Advertisment
Advertisements

இந்த வீடியோவைப் பாருங்கள்:

பல சமூக ஊடக பயனர்கள் பெண் காவலரின் துணிச்சலைப் பாராட்டிய அதே வேளையில், மற்றவர்கள் அவரது குழந்தையின் உயிரைப் பணயம் வைத்ததற்காக அதிகாரிகளை விமர்சித்தனர்.  “டெல்லி மற்றும் பாட்னாவில் நாங்கள் பார்த்ததைப் போல, அவர் தனது குழந்தையைப் பணயம் வைக்க வேண்டுமா? பெரும்பாலும், ஆர்.பி.எஃப் அனைத்து நிலையங்களிலும் ஒரு அலுவலக இடத்தில், சிறு குழந்தைகளுக்கான பகுதியை உருவாக்குவது மட்டுமே இதற்கு உதவும், ஏனென்றால், ஊழியர்களுக்கு குழந்தை இருந்தால் அவர்களை வேலைக்கு அழைத்து வரலாம்” என்று ஒரு பயனர் எழுதினார். 
 
மற்றொரு பயனர்,  “அவருக்கு விருப்பங்கள் உள்ளன. அவர் தேர்ந்தெடுத்ததைச் செய்கிறார்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

“இதை பெண்சக்தி என்று அழைப்பதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும். நாரிசக்தி குழந்தையைப் பெற்றெடுத்தபோது ஏற்கனவே காட்டப்பட்டுள்ளது. அவர் செய்வது அவருடைய வேலைக்கு அநீதி இழைப்பதும், அதே நேரத்தில் குழந்தையை ஆபத்தில் ஆழ்த்துவதும் ஆகும்” என்று மூன்றாவது பயனர் பதிலளித்தார்.

மகா கும்பமேளாவின் போது புது டெல்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: