New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/05/rs-bharathi-2.jpg)
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் டி.ஆர்.பாலுவிடம் தான் கேட்க வேண்டும், ஸ்டாலினை கேட்காதீர்கள் என்று பொருள்படும் விதமாக பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் டி.ஆர்.பாலுவிடம் தான் கேட்க வேண்டும், ஸ்டாலினை கேட்காதீர்கள் என்று பொருள்படும் விதமாக பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். இவர் ஏற்கெனவே பட்டியல் இனத்தவரைக் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சர்ச்சையாகி அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. அதே போல, ஊடகங்களை சிவப்பு விளக்கு பகுதியுடன் தொடர்புபடுத்தி பேசியது சார்ச்சையானது. இப்படி, சர்ச்சை கருத்துகளுக்கு பெயர் போன ஆர்.எஸ். பாரதி மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
தேர்தல் அறிக்கையில் வந்ததுக்கெல்லாம் T.Rபாலுவைதான் கேட்கணுமாம்.. ஸ்டாலினை கேட்க கூடாதாம்…!🥵
— தலைவன் (@panuprathapadmk) May 24, 2022
நல்ல வேளை..
அந்த அறிக்கையை print பண்ண printing press owner ஐ கேட்கணும் அல்லது அதைத் எழுத பயன்படுத்திய பேனா company owner ஐ கேட்கணும்ன்னு சொல்லாம விட்டாரே..
இதுக்கு கைதட்டல் வேற..!😡😡 pic.twitter.com/ByFSgGXyet
இந்த நிலையில், திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தேர்தல் அறிக்கையை தயார் செய்தது டிர். ஆர்.பாலு. ஏதாவது, விட்டு போய் இருந்தால் நீங்கள் அவரை தான் கேட்க வேண்டும். தெரியாமல் சில முண்டங்கள் மு.க ஸ்டாலினை கேட்டு கொண்டு இருக்கிறார்கள். கேட்க வேண்டிய ஆளே டி.ஆர் பாலு தான் என்று பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
திமுக கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை என்ற அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
தேர்தல் அறிக்கை ரெடி செய்தது டிஆர் பாலு தானாம் அவரை தான் கேட்கனுமாம். ஸ்டாலினை கேட்க கூடாதாம்.
— Ganesh (@VillupuramBJP1) May 24, 2022
பிரிண்டிங் செய்தவரை கூட கேட்கலாமே 😂@sreeramjvc @Isriramseshadri @Selvakumar_IN @SaffronDalit @ikkmurugan @jkgche @Gopalee67 @rvaidya2000 @ranganaathan @ranganaathan @raaga31280 pic.twitter.com/rM9M9DJHpx
இதனால், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் ஏன் நிறைவேற்றவில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பி வரும் சூழலில், அண்மையில், திமுக கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ். பாரதி, “தேர்தல் அறிக்கையை டி.ஆர். பாலுதான் தயாரித்தார். ஏதாவது விட்டுப் போயிருந்தால் நீங்கள் அவரைத்தான் போய் கேட்க வேண்டும். தெரியாத சில முண்டங்கள் மு.க. ஸ்டாலினை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். கேட்க வேண்டிய ஆளே டி.ஆர். பாலுதான்.” என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், தேர்தல் அறிக்கையை தயார் செய்த திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவைத்தான் கேட்க வேண்டும், மு.க. ஸ்டாலினை கேட்காதீர்கள் என்று ஆர். எஸ். பாரதி கூறியிருப்பது சமூக ஊடகங்களில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ். பாரதியின் கருத்துக்கு, எதிர்க்கட்சிகளான, அதிமுக, பாஜகவினர் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.