Advertisment

தாய்லாந்து கடற்கரையில் பாறை மீது யோகா செய்த ரஷ்ய நடிகை; அலையில் அடித்துச் செல்லப்பட்டு மரணம்: அதிர்ச்சி வீடியோ

ரஷ்யாவைச் சேர்ந்த நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா தாய்லாந்து கடற்கரையில் பாறை மீது அமர்ந்து யோகா பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, கடல் அலையில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
russian actress

ரஷ்ய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா பெரிய அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். (image grab from Source: Instagram/ Daily Mail)

ரஷ்ய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா தனது காதலனுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். 24 வயதான கமிலா தாய்லாந்தின் கோ சாமுய் கடற்கரையில் பாறை மீது அமர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கடலில் இருந்து வேகமாக வந்த ஒரு பெரிய அலையால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும், 15 நிமிடங்களில் மீட்புக் குழுக்கள் வந்தன. ஆனால், கடுமையான கடல் கொந்தளிப்பு காரணமாக அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்த சம்பவத்தின்போது பதிவான வீடியோவில், கொந்தளிப்பான கடலுக்குள் கமிலா இழுத்துச் செல்லப்படுவதற்கு முன், பாறைகள் நிறைந்த கடற்கரையில் அவர் ஒரு பெரிய பாறை மீது அமர்ந்து தியானம் செய்வதை காட்டுகிறது. பின்னர், அவர் காணாமல் போன இடத்தில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வீடியோவை டெய்லி மெயில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ரஷ்ய நடிகை கமிலா தாய்லாந்தின் கோ சாமுய் கடற்கரையை அவர் மிகவும் நேசித்துள்ளார். அதனால், அவர் அடிக்கடி இங்கே சென்று வந்துள்ளார். அவர் தனது சமூக ஊடகப் பதிவில், “நான் சாமுயியை மிகவும் நேசிக்கிறேன். இந்த பாறை கடற்கரை என் வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த விஷயம். பிரபஞ்சமே, என்னை இங்கே இருக்க அனுமதித்ததற்கு நன்றி. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
Advertisement

ரஷ்ய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா தான் மிகவும் நேசித்த கடற்கரையிலேயே மரணம் அடைந்திருப்பது அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment