New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/08/russian-blogger-tied-gf-on-car-roof.jpg)
மக்களிடம் இருந்தும் அதிகாரிகளிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து இதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
Russian blogger drives with girlfriend tied to the roof : வர வர இன்ஸ்டகிராம் இன்ஃப்ளூயென்சர்களுக்கு எல்லாம் ஏதாவது ”மண்டக் கோளாறா”ன்னு தெரியாத அளவுக்கு லைக்குகளுக்காக பல ஸ்டண்ட்டுகளை அரங்கேற்றம் செய்கின்றனர்.
ரஷ்யாவில் ப்ளாகர் ஒருவர் தன்னுடைய பெண் தோழி ஒருவரை ஒருவரை தன்னுடைய காரின் மேலே கட்டி வைத்து மாஸ்கோவை சுற்றி காட்டிய காட்சிகள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
செர்கெய் கொசென்கோ என்பவர் பச்சை நிற மெட்டாலிக் க்ரீன் பெண்ட்லே கார் மேலே தன்னுடைய பெண் தோழி ஐலோனாவை கட்டி, வாயை மூடி, இருவரும் தங்களின் கைகளை கட்டி பயணம் செய்த காட்சிகளை தன்னுடைய ரீல்ஸில் வெளியிட்டுள்ளார்.
வைரலான இந்த வீடியோவில் மாஸ்கோ நகர போக்குவரத்து காவலர்கள் வரும் காட்சிகளும் இடம் பெற்றிருந்த நிலையில், இந்த வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது காவல்துறை என்று ஆ.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது
ரென் டிவியில் பேட்டி அளித்த அந்த ப்ளாகர், இவருடைய பெண் தோழி செய்தது டாஸ்க் என்றும், இதே போன்று பல டாஸ்க்குகளை அவர் செய்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்த பச்சை நிற பெண்ட்லே கார் வேறோருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 68 அபாரதங்கள் அதன் மீது விதிக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. மக்களிடம் இருந்தும் அதிகாரிகளிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து இதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.