கரப்பான்பூச்சி வீடுகளில் பெரும் தொல்லையாக கருதப்பட்டுவரும் நிலையில், ஒரு வளர்ப்பு கரப்பான்பூச்சிக்கு மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
பொதுவாக பலரும் வீடுகளில் கரப்பான்பூச்சிகளை பெரும் தொல்லையாக கருதுவதுண்டு. ஆனால், ரஷ்யாவில் ஒருவர் தனது வீட்டில் கரப்பான் பூச்சியை வளர்ப்பு பூச்சியாக வளர்த்து வந்துள்ளார். அவர் தனது கரப்பான்பூச்சி வழக்கத்திற்கு மாறாக மிகுந்த சிரமப்படுவதாக அறிந்தார். உடனடியாக அவர் சைபிரியாவின் கிரஸ்னோயார்ஸ்க்கில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அந்த கரப்பான்பூச்சியை எடுத்துவந்தார்.
அந்த கரப்பான் பூச்சியை பரிசோதித்த மருத்துவர் அது பிரசவிக்க சிரமப்படுவதை கண்டுபிடித்தார். அது மட்டுமில்லாமல், அந்த கரப்பான் பூச்சி இயற்கையாக பிரசவிப்பதில் சிக்கலாக இருப்பதையும் கண்டறிந்தார். இதையடுத்து, அதற்கு உள்ளே எடுத்துக் கொள்ளும் வகையில் ஒரு மயக்க மருந்து, சாதாரண அனஸ்திஷியா, மற்றும் வாயு அனஸ்திஷியா ஆகிய மூன்று விதமான மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டன. பின்னர், அந்த கரப்பான் பூச்சியின் உடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் முட்டைப் பை எடுக்கப்பட்டது. கால்நடை மருத்துவர் அந்த கரப்பான்பூச்சிக்கு செய்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததால் அது உயிர்பிழைத்தது.
Russian vets successfully perform nano-surgery on cockroach that had pregnancy complications
MORE: https://t.co/LcWyowHeQY pic.twitter.com/zclHWEcf5Q— RT (@RT_com) December 27, 2019
இது குறித்து ரஷ்யாவின் சமூக ஊடகத்தளமான விகேவில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ பதிவில், டிசம்பர் 21 ஆம் தேதி ஒருவர் தான் வளர்த்த கரப்பான் பூச்சியை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுவந்ததாகவும் அதற்கு அறுவை சிகிச்சை முறையில் பிரசவம் பார்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆனது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இந்த கரப்பான்பூச்சி தென் அமெரிக்க காடுகளில் காணப்படும் அர்சிமந்திரத்தா என்ற அறிவியல் பெயர்கொண்ட அரிய வகை கரப்பான்பூச்சி வகை. இது தனது வாழ்நாளில் 8 செ.மீ நீளத்துக்கு வளருமாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.