Advertisment

என் பிறந்த நாள் மாஸ்டருடன் தான். பயிற்சி தந்த குருவை மறக்காத தன்ஷிகா.. என்ன பொண்ணுப்பா!

வீர விளையாட்டுக்களை கற்று தந்த இந்த இடம்  கோயில்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தன்ஷிகா பிறந்த நாள்

தன்ஷிகா பிறந்த நாள்

நடிகை தன்ஷிகாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பார்த்த அனைவரும் வியப்பில் தன்ஷிகாவை மனதார பாராட்டி வருகின்றனர்.

Advertisment

தன்ஷிகா பிறந்த நாள் கொண்டாட்டம்:

சினிமாவில் இருக்கும் பிரபலங்களில் பிறந்த நாள் கொண்டாட்டம் எப்போதுமே அனைவராலும் உற்று நோக்கப்படும் ஒன்று. அதிலும் ஹீரோயின்கள் பிறந்த நாள் என்றால் கேட்கவே வேண்டாம்.  பெரும்பாலான நடிகைகளின் பிறந்த நாள், ஒன்று குடும்பத்துடன் இருக்கும் அல்லது  முதியோர் இல்லங்கள்.அப்படி இல்லையென்றால் சிலர் ஷூட்டிங் பிஸியில்  படம்பிடிப்பில் இருந்துக் கொண்டே பிறந்த நாளை  கொண்டாடுவார்கள்.

ஆனால்  நடிகை  தன்ஷிகாவின் பிறந்த நாள் கொண்டாட்டமோ இதுவரை எவரும்  செய்திடாத ஒன்று. தமிழ் சினிமாவில் எப்போதுமே சரளமாக தமிழில் பேசி, நன்கு நடிக்கக்கூடிய  ஹீரோயின்களுக்கு மவுசு சற்று கூட தான்.

இந்த லிஸ்டில் ஐஸ்வர்யா ராஜேஷ், தன்ஷிகா,  நிவேதா பெத்துராஜ் போன்ற நடிகைகள் முதலில் உள்ளனர்.  தன்ஷிகாவின் பரதேசி படத்திற்கு பிறகு ஏகப்பட்ட ரசிகர்கள். கபாலி படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். இந்நிலையில் அவரின் பிறந்த நாள் நேற்று (20.11.18) கொண்டாடப்பட்டது.

தனது பிறந்த நாளை தன்ஷிகா,  சிலம்பம் பயிற்சி அளித்த மாஸ்டர் பாண்டியன்  மற்றும் சக சிலம்பாட்ட கலைஞர்களுடன் கொண்டாடினார்.  முதலில்  குரு தட்சணை தந்து மாஸ்டர் பாண்டியனிடம் ஆசிர்வாதம்  பெற்றார்.

பின்பு அனைவரைம் மெய்சிலிர்க்கும் வகையில்,  தனது குரு கற்று தந்த  சிலம்பாட்டத்தை அவர் முன்னே செய்து காட்டி அசத்தினார். இதுக்குறித்து   பேசிய  தன்ஷிகா, ”வீர விளையாட்டுக்களை கற்று தந்த இந்த இடம்  கோயில் மாதிரி . மாஸ்டர் பாண்டியன் எனக்கு ஆசான். இங்கு பிறந்த நாளை கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.

Sai Dhanshika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment