சாய்பல்லவி பாரம்பரிய உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோத்தகிரி பகுதியில் உள்ள படுகா மலை வாழ் இனத்தை சேர்ந்தவர் சாய்பல்லவி. இவர் ’உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ ரியலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் அசத்தலான நடனத்தை வெளிபடுத்தினார். டைடில் வின்னராக அவர் வரவில்லை என்றாலும் அந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

இந்நிலையில் ’தாம்தூம்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் இவருக்கு அதிக ரசிகர்களை உருவாக்கியது. மேலும் தொடர்ந்து வித்தியமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடித்த கார்க்கி படம் பரலவாக பேசப்பட்டது. இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு சென்ற சாய்பல்லவி, படுகா மக்களின் பாரம்பரிய உடைகளை அணிந்துள்ளார். அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் அந்த பாரம்பரிய உடையை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.