பவுலரிலிருந்து மொக்கை ஜோக்ஸ் மன்னனாக மாறிய மோகித் சர்மா..பாவம் சாக்‌ஷி மாட்டிக்கிட்டாங்க!

மோகித் சர்மா மொக்கை ஜோக்குகளுக்கெல்லாம் மன்னாதி மன்னன்

By: Updated: March 29, 2019, 12:40:25 PM

csk twitter : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உலகளவில் ரசிகர்கள் இருப்பது நாடு அறிந்த ஒன்று. இந்த யெல்லோ ஆர்மிக்கு இருக்கும் மவுசு மற்ற அணி வீரர்களையும் திக்கு முக்காட வைக்கும்.

சிஎஸ்கே அணி முதியவர்கள் அணி என்ற விமர்சனத்தை தொடர்ந்து சந்தித்தாலும் இவர்கள் அடிக்கும் லூட்டி குழந்தைகளை விட மோசமானது. பிராவோ, ரெய்னா, தல தோனி என எல்லா கூல் பிளாயர்ஸும் இங்கு இடம் பெற்றிருப்பதால் அதிரடி ஆடுகளத்தில் மட்டும் இல்லை ட்ராவல் செய்யும் பஸ், விமான என அனைத்திலும் தொடரும்.

அதுஎன்னவோ இந்த அணிக்கே உண்டான இயல்பு போல, யெல்லோ ஆர்மியில் யார் இணைந்தாலும் சரி அவர்கள் இப்படித்தான் ஆயிவிடுவார்கள். இதுவரை சீரியஸ் முகத்தை மட்டுமே நமக்கு காட்டிக் கொண்டிருந்த பவுலர் மோகித் சர்மா மொக்கை ஜோக்குகளுக்கெல்லாம் மன்னாதி மன்னன் என்பதை இந்த ஒரு வீடியோவில் நிரூப்பித்து விட்டார்.

சிஸ்கே அணி அடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் போட்டிக்காக மீண்டும் சென்னை திரும்பியது. அப்போது விமானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயர்கள், அவர்களின் குடும்பத்தார்,அணியின் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் ட்ராவல் செய்தனர். இந்த ட்ராவலில் தீடீரென்று ஆங்கர் அவதாரம் எடுத்த மோகித் சர்மா எல்லோரிடமும் சென்று ஜோக் என்ற பெயரில் செய்த அட்டூழியம் இருக்கே.

இதில் முதலில் மாட்டியது தோனியின் மனைவி சாக்‌ஷி தான். மோகித் சர்மா அவரிடம் சென்று, நூறில் எத்தனை முறை பத்தை கழிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சாக்‌ஷி 10 முறை என்று கூற, மோகித் தவறான விடை என்றார். மீண்டும் சாக்‌ஷி முயற்சி செய்து 100 முறை என்றால், அதையும் தவறு என்று கூறிவிட்டு மோகித் சொன்ன விடை என்ன தெரியுமா?

1முறை.. ஏனென்றால் நூறில் 10 சென்று விட்டால் மீதி 90 தானே இருக்கும். அப்ப எப்படி நூறில் பத்தை கழிக்க முடியும் என்று கூறிவிட்டு அதற்கு அவரே விழுந்து விழுந்து சிரித்தார். மோகித் ஆட்டம் இதோடு நிற்கவில்லை. ஜெடேஜா, மற்ற வீரர்கள் என அனைவரிடமும் தொடர்ந்தது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sakshi dhoni karn sharma fall prey to mohit sharmas pun as csk travel back to chennai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X