New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/cats-14.jpg)
அது யாருடைய குழந்தையாக இருந்தால் என்ன பார்க்க நன்றாக உள்ளது தானே. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
Sakshi Dhoni shares pics of daughter Ziva holding a baby : இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ் தோனியின் மனைவி சாக்ஷி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மகள் கையில் ஒரு குட்டி குழந்தை இருப்பதை போன்று போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்தவுடனே சாக்ஷி நமக்கு ஏதோ நல்ல செய்தி சொல்கிறார் என்று தோனியின் ரசிகர்கள் ஏகோபித்த குஷியில் இருக்கின்றனர். இந்த புகைப்படங்கள் பதிவிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே 3.7 லட்சம் லைக்குள் மற்றும் 2000 கமெண்ட்களை பெற்றுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த புகைப்படங்கள் ஜிவாவின் இன்ஸ்டகிராம் பக்கத்திலும் ஷேர் செய்யப்பட்டுள்ளது.
நாங்கள் உங்கள் இருவரையும் வாழ்த்துகிறோம் என்று துவங்கி நீங்கள் மீண்டும் பெற்றோர்களாகியுள்ளீர்களா என்பதை வரை கேள்விகளால் குடைந்துவிட்டனர்.
மேலும் படிக்க : 7 மணி நேரம் வாகன ஓட்டிகளுக்கு உதவிய மாருதி! இந்த மனசு யாருக்கு வரும்?
ஒரு சிலரோ ஹர்திக் பாண்டியாவின் மகனா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஹர்திக் மற்றும் அவருடைய காதலி நடாஷா ஸ்டான்கோவிற்கும் ஜூலை 30ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. அது யாருடைய குழந்தையாக இருந்தால் என்ன பார்க்க நன்றாக உள்ளது தானே. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.