தோனிக்காக 100 விசில்கள்.. வித்யாசமான பரிசை கண்டு ஆடி போன தல!

மாஸான சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு ஐபிஎல் நிர்வாக சூப்பரான சர்ப்பிரைஸ் பரிசு

whistle podu: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு வித்யாசமான பரிசு கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல… தோனி வந்தாலே அரங்கத்தில் விசில்கள் பறக்கும். ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளக்கும். இப்படி ஒரு மாஸான சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு ஐபிஎல் நிர்வாக சூப்பரான சர்ப்பிரைஸ் பரிசு ஒன்றை வழங்கியுள்ளது.

தோனி தலைமையிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைந்துள்ளது. இரண்டு வருட தடைக்கு பிறகு கடந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் களம் கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது.

இதனை அடுத்து நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசனிலும் சென்னை அணி கலக்கி வருகிறது. இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 8 -ல் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் சென்னை அணி முதல் இடத்தில் இருந்து வருகிறது.

சென்னை அணியின் இந்த வெற்றிக்கு தோனி மிக முக்கிய காரணம் என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது. எத்தனையோ போட்டிகளில் தோனி இறங்கிய அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்த சென்ற தருணங்கள் எல்லாம் சிஎஸ்கே டீமுக்கு டாப் எனர்ஷி மூமண்ட்ஸ் தான். இந்த நிகழ்வை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில், நேற்று இரவு நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியில் ஐபிஎல் நிர்வாகம் ஒரு நினைவு பரிசை வழங்கியது.

சென்னை அணியின் கேப்டன் தோனி 100 போட்டிகளுக்கு மேல் அணியை வெற்றி பெற செய்த கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக 100 விசில்கள் அடங்கிய சிறப்பு பரிசை வழங்கியுள்ளது. அதில் ”yellove 100″ என்ற வாசகமும அடங்கியுள்ளது.

 

View this post on Instagram

 

Congratulations #thala ???????? #whistlepodu 100 whistles for you !

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

இந்த மகிழ்ச்சியான தருணத்தை தோனி மனைவு சாக்‌ஷி புகைப்படத்துடன் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close