ஆண்டுக்கு ரூ.30 கோடி சம்பளம்: வெறும் ஸ்விட்ச் போடும் வேலை! இது உண்மையா? பொய்யா?

கலங்கரை விளக்கத்தில் ஸ்விட்ச் ஆன்-ஆஃப் செய்வது மட்டும்தான் உங்கள் ஒரே வேலை, அதற்காக ஆண்டுக்கு ரூ.30 கோடி சம்பளம் என்றால் நம்பமுடிகிறதா? இப்படி ஒரு கவர்ச்சிகரமான வேலை இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் தீயாய் பரவி வருகிறது.

கலங்கரை விளக்கத்தில் ஸ்விட்ச் ஆன்-ஆஃப் செய்வது மட்டும்தான் உங்கள் ஒரே வேலை, அதற்காக ஆண்டுக்கு ரூ.30 கோடி சம்பளம் என்றால் நம்பமுடிகிறதா? இப்படி ஒரு கவர்ச்சிகரமான வேலை இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் தீயாய் பரவி வருகிறது.

author-image
WebDesk
New Update
Lighthouse of Alexandria

ஆண்டுக்கு ரூ.30 கோடி சம்பளம்: வெறும் ஸ்விட்ச் போடும் வேலை! இது உண்மையா? பொய்யா?

ஆண்டுக்கு ரூ.30 கோடி (சுமார் £2.8 மில்லியன்) சம்பளத்தில், கலங்கரை விளக்கத்தில் வெறும் லைட் சுவிட்சை ஆன்-ஆஃப் செய்யும் வேலை இருப்பதாகவும், அதுதான் உலகின் மிகவும் சவாலானது ஆனால் கவர்ச்சிகரமான வேலை என்றும் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் தகவல் தீயாய் பரவி வருகிறது. முதலாளி தொல்லை இல்லை, அலுவலகச்சுமை இல்லை, எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம் போன்ற கவர்ச்சிகரமான அம்சங்களும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்த வைரல் தலைப்புகளுக்கு பின்னால் உள்ள உண்மை என்ன?என்பதை ஆராய்வோம்.

Advertisment

அலெக்சாண்ட்ரியா கலங்கரை விளக்கம் - உண்மையின் மறுபக்கம்!

"அலெக்சாண்ட்ரியா கலங்கரை விளக்கக் காவலர்" பணிக்கு ரூ.30 கோடி சம்பளம் என்பது முற்றிலும் தவறான தகவல் ஆகும். வரலாற்றின் 7 அதிசயங்களில் ஒன்றான எகிப்தின் அலெக்சாண்ட்ரியா கலங்கரை விளக்கம் (Lighthouse of Alexandria), கி.பி. 956, 1303, 1323 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கங்களால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே முழுமையாக அழிந்துவிட்டது. தற்போது அதன் இடிபாடுகளைக் கொண்டு கோட்டை மட்டுமே உள்ளது. மேலும், சில இடங்களில் "ஜூமோன் கலங்கரை விளக்கம்" என்ற பெயரும் பிரான்ஸ் நாட்டில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பிரான்சில் அத்தகைய பெயரில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ கலங்கரை விளக்கமும் இல்லை.

உலகின் பெரும்பாலான கலங்கரை விளக்கங்கள் இப்போது முழுமையாக தானியங்கி மயமாக்கப்பட்டுவிட்டன. அதாவது, அவற்றை மனிதர்கள் சென்று பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. நவீன தொழில்நுட்பம், சூரிய சக்தி மற்றும் செயற்கைக்கோள் கட்டுப்பாடுகள் மூலம் அவை தானாகவே இயங்குகின்றன. சில இடங்களில் மனிதக் கண்காணிப்பு தேவைப்படும் கலங்கரை விளக்கங்கள் இருந்தாலும், அதற்கான சம்பளம் சமூக வலைத்தளங்களில் பரவும் ரூ.30 கோடி என்பதுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானதே.

Advertisment
Advertisements

பொதுவாக, கலங்கரை விளக்கப் பணிகள் அரசு அல்லது கடல்சார் முகமைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்தப் பணிகளுக்கான சம்பளம், அந்தப் பகுதியின் புவியியல் இருப்பிடம் மற்றும் பொறுப்புகளின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து ஆண்டுக்கு $40,000 முதல் $60,000 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.33 லட்சம் முதல் ரூ.50 லட்சம்) வரை இருக்கும்.

எனவே, ஆண்டுக்கு ரூ.30 கோடி சம்பளத்தில் "ஸ்விட்ச் போடும்" வேலை என்பது சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தவறான தகவல் என்பது தெளிவாகிறது. இத்தகைய கவர்ச்சியான செய்திகளைப் படிக்கும்போதும், பகிரும்போதும் அதன் உண்மைத் தன்மையை சரிபார்ப்பது மிகவும் முக்கியம்.

Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: