”நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்” – அந்த கேமராமேனை எங்க புடிச்சீங்க?

இத்தனை விவாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட இந்த புகைப்படங்களை ஷேர் செய்த சில மணி நேரங்களிலேயே 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

By: Updated: July 15, 2020, 11:42:58 AM

Salman Khan’s recent farmer avatar sparks meme-fest online : கடந்த சில வாரங்களாகவே பாலிவுட் நட்சத்திரங்களின் மோசமான, அசட்டுத்தனமான பக்கங்கள் வெளிப்பட்ட வண்ணம் ஆக இருக்கிறது. சுஷாந்த்தின் மரணம் அந்த திரையுலகின் குரூர பக்கத்தை காட்ட, சமீபத்தில் நடிகர்கள் வெளியிடும் சமூக வலைதள புகைப்படங்களும் சில சமயங்களில் நெட்டிசன்களுக்கு எரிச்சல் ஊட்டுவதாய் இருக்கிறது.

சல்மான் கான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவசாயிகளை மதிப்போம் என்ற கேப்சனுடன் அவர் வயலில் கடினமாக வேலை செய்வது போன்று புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை நெட்டிசன்கள் வரவேற்பார்கள் என்று நினைத்திருப்பார் சல்லு. ஆனால் நடந்தது என்னவோ வேறு ஒன்று.

 

View this post on Instagram

 

Daane daane pe likha hota hai khane wale Ka naam… jai jawan ! jai kissan !

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

 

View this post on Instagram

 

Respect to all the farmers . .

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

இத்தனை விவாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட இந்த புகைப்படங்களை ஷேர் செய்த சில மணி நேரங்களிலேயே இன்ஸ்டாகிராமில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். ஆனால் ட்விட்டரில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவிட்டனர் அவரை.

சர்ஃப் எக்ஸல் விளம்பர படம், சிந்திய  கோல்ட் காஃபி என்று சல்மானை நாராய் நாராய் பிரித்து தொங்கவிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Salman khans recent former avatar sparks meme fest online

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X