தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ஜீ தொலைக்காட்சி நிறுவனத்தின் விருது வழங்கும் விழாவுக்கு அணிந்து சென்ற பிங்க் எம்ப்ராய்டரி சேலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
நடிகை சமந்தா அக்கினேனி வீட்டை விட்டு வெளியே சென்றாலே அனைவருடைய தலைகளும் அவரைப் பார்க்க அனிச்சையாக திரும்பும்படி அழகான புதிய ஃபேஷன் ஆடைகளை அணிந்து வலம் வருகிறார்.
தமிழ், தெலுங்கு, சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா அக்கினேனி தனது நடிப்புகாக மட்டுமல்லாமல் கொள்ளைகொள்ளும் பேரழகுக்காகவும் அழகான காஸ்ட்யூம்களுக்காகவும் அவரது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக உடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகும். சமந்தா பாரம்பரிய உடை அணிந்திருந்தாலும் அல்லது நவநாகரிக உடை அணிந்திருந்தாலும் அவரது புகைப்படங்கள் ரசிகர்களை காந்தம் போல கவரத் தவறியதே இல்லை.
அண்மையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிங்க் நிறத்தில் எம்ப்ராய்டரி சேலையுடன் ஃபுல் ஸ்லீவ் பிளவுஸ் அணிந்து மிகவும் வசீகரிக்கும் அழகுடன் தோன்றும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களையும் நெட்டிசன்களையும் கவர்ந்து வருகிறது.
பிஸியான நடிகையாக இருக்கும்போதே சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தா நடித்திருந்தார். இதில் சமந்தாவின் நடிப்பை பலரும் பாராட்டினர். இந்தப் படத்தில், பகத் பாசில், மிஷ்கின், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஜீ சினி விருதுகள் தமிழ் 2020 விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஜூரி விருதை சமந்தாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழாவில்தான் சமந்தா பிங்க் எம்ப்ராய்டரி சேலை மற்றும் ஃபுல் ஸ்லீவ் பிளவுஸ் அணிந்து மயக்கும் காஸ்ட்யூமில் சென்றுள்ளார்.
அபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் நெட்டிசன்கள் லைக் செய்துவருகின்றனர்.