மகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்!

சோயிப் மாலிக்கை சானியா திருமணம் செய்த பின்பு அவர் சந்தித்த விமர்சனங்கள் எண்ணில் அடங்காதவை.

By: Updated: November 16, 2018, 04:20:06 PM

இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 32 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சானியா மிர்சா பிறந்த நாள்:

இந்தியாவின் மகளாய் பிறந்து பாகிஸ்தானுக்கு மருமகளாக சென்ற சானியா மிர்சா தனது 32  ஆவது பிறந்த நாளை நேற்று (15. 11.18) கொண்டாடினார்.  டென்னிஸில்  உலக மகளிர் தரவரிசையில் இந்தியாவை சேர்ந்த யாருமே தொடமுடியாத உச்சத்தை தொட்டு, 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் சானியா மிர்சாவிற்கு சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.

இந்தியா-பாகிஸ்தான் என 2 நாட்டு மக்களாலும் நேசிக்கப்படும் ஒரே நபராக சானியா மிர்சா மாற காரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோய்ப் மாலிக் தான். கடந்த 2010 ஆம் ஆண்டு சோயிப் மாலிக்கை சானியா திருமணம் செய்த பின்பு அவர் சந்தித்த விமர்சனங்கள் எண்ணில் அடங்காதவை.

பாகிஸ்தானின் மருமகள் பாகிஸ்தானுக்காக தான் விளையாட வேண்டும் என சர்ச்சைகள் கிளம்பிய போதும், இந்தியாவுக்காக மட்டுமே தொடர்ந்து விளையாடுவேன் என  தனது முடிவில் உறுதியாக இருந்தா சானியா  இன்று வரை தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அரபு மொழியில் இஜான் என்று பெயர் வைக்கப்பட்டது.

குழந்தையுடன் 3 நாட்கள் மருத்துவமனையில் இருந்த  சானியா  பின்பு வீடு திரும்பினார். இந்நிலையில்  குழந்தை பிறந்து 16 ஆம் நாளும், சானியாவின் பிறந்த நாளும் ஒரே நாளில் அமைந்தது. இதை மிகவும் அழகாக குறிப்பிடும் வகையில்  சானியாவின் கணவர் சோயிப் மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் “என் மகன் பிறந்து 16 ஆவது நாள், என் மனைவியும் ஸ்வீட் 16 போல் தெரிகிறார்” என்று  தெரிவித்துள்ளார்.

சானியா மிர்சாவின் பிறந்த நாள் எளிமையாக அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது.  இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sania mirza shares adorable pic with husband shoaib malik on birthday

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X