ஒரே ஒரு ஃபோட்டோ மூலம் இந்திய பெண் என்பதை நிரூபித்தார் சானியா மிர்சா!

ஆகஸ்ட் 15 அன்று ஃபோட்டோ மற்றும் வீடியோ ஒன்று வெளியிட்டு  அசத்தியுள்ளார்.

சுதந்திர தினத்தன்று  டென்னிஸ்  வீராங்கனை சானியா மிர்சா செய்த செயலுக்கு பலரிடம் இருந்து  அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சானியா மிர்சா சுதந்திர தினக் கொண்டாட்டம் :

இந்தியாவின் டென்னில் வீராங்கணையான சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இவர்களின் திருமணம்  பல்வேறு பிரச்சனைகளை கடந்து நடைப்பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று.

பாகிஸ்தான் மருமகளாக  சானியா மிர்சா சென்ற பின்பு,  இந்தியா – பாகிஸ்தான் குறித்த எந்த நிகழ்வு என்றாலும் அவரிடம் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை  எழுப்புவார்கள்.  இதுப் போன்று பல்வேறு விமர்சனங்களுக்கு இதுவரை சானியா மிர்சா பதில் அளித்துள்ளார்.

அண்மையில் சானியா மிர்சாவின் ட்விட்டர் பக்கத்தில் அவரின் ரசிகர் ஒருவர்,  பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14  குறிப்பிட்டு  ”உங்களின் சுதந்திர நாள் இன்று தானே.. சுதந்திர தின வாழ்த்துக்கள் சானியா மிர்சா” என்று கூறியுள்ளார்.

இதற்கு தகுந்த பதில் அளித்த சானியா தனது ரசிகருக்கு “ என்னுடைய சுதந்திர தின விழா நாளை (ஆகஸ்ட் 15 ) தான்.. என கணவரின் சுதந்திர தின விழா தான் இன்று.  நான் தெளிவாக இருக்கிறேன். உங்களுக்கு  குழப்பாமா?” என்று கூறினார்.

சானியாவின் இந்த பதிலை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.  இதை மீண்டும் நிரூப்பிக்கும் வகையில் சானியா  ஆகஸ்ட் 15 அன்று ஃபோட்டோ மற்றும் வீடியோ ஒன்று வெளியிட்டு  அசத்தியுள்ளார்.

அந்த ஃபோட்டோவில் இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டம், இந்தியாவின்  கொடியின் புகைப்படம், அதனுடன்  சானியா மிர்சாவும் இந்தியாவின் கொடி நிறத்தில் உடையணிந்து சுதந்திர தினத்தைக் கொண்டாடியுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ எனது நாட்டுக்காக முதன்முறையாக விளையாடி முதல் புள்ளியைப் பெற்றபோது தான் நான் சுதந்திரமடைந்ததாக உணர்ந்தேன். நான் விளையாடுவதற்கும் குறிப்பிட்ட ஆடைகளை உடுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனது கனவை நோக்கிய பயணத்தில் எந்த வித தடைகளையும் நான் அனுமதிக்கவில்லை. “என்று கூறியுள்ளார்.

சானியா மிர்சாவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close