கிறிஸ்மஸ் கிட்டத்தட்ட வந்துவிட்டது, குழந்தைகள் ஏற்கனவே சாண்டா கிளாஸிடமிருந்து விரும்பும் விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளனர்
பொதுவாக குழந்தைகள் தாங்கள் விளையாடும் பொம்மைகள் மற்றும் பிற பொருட்களைக் கேட்கும் பழக்கம் உள்ள நிலையில், இந்த சிறுமியின் நெஞ்சை பதற வைக்கும் வேண்டுகோள் நெட்டிசன்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
அந்தச் சிறுமி கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கிறிஸ்துமஸுக்கு அம்மா மற்றும் அப்பாவுக்கு கொஞ்சம் பணம் வேண்டும். அவர்கள் பில்கள் மற்றும் அடமானங்களுடன் போராடுகிறார்கள்.
எனக்கு வருத்தமாக இருக்கிறது. தயவுசெய்து, சாண்டா, நீங்கள் அதைச் செய்ய முடியுமா? அது நிறைய இருக்கிறது என்று எனக்குத் தெரியும், மன்னிக்கவும். எம்மியை நேசிக்கவும்” எனத் தெரிவித்துள்ளார்.
கண்ணீர் வரவழைக்கும் இந்தக் கடிதத்தை சிறுமியின் உறவுக்கார பெண்மணி நிக்கோல் கானெல் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகையால் பலரும் இங்கிலாந்த பிரதமர் ரிஷி சுனக் இந்த விஷயத்தில் உதவ வேண்டும் என டேக் செய்துவருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/