யோகி பாபு கன்னம் கிள்ளும் குறும்பு தளபதி விஜய்!!! வைரல் வீடியோ

சர்கார் படத்தின் படப்பின் இடைவேளையில் நடிகர் யோகி பாபு கன்னத்தை நடிகர் விஜய் கிள்ளும் குறும்பு வீடியோ வைரலாகி வருகிறது.

இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் கதை, நடிகர் விஜய் லுக் மற்றும் பல விஷயங்களை இயக்குநர் முருகதாஸ் ரகசியமாகக் காப்பாற்றி வருகிறார். ஆனாலும்  இப்படத்தில் நடிக்கும் வரலட்சுமி சரத்குமார் அவ்வப்போது பூமரேங் வீடியோ அல்லது ஃபோட்டோவை வெளியிட்டு வருகிறார். என்னதான் வீடியோ ஃபோட்டோக்கள் வெளியானாலும், அதில் ஒரு மர்மத்தை வைத்து தான் வெளியிடுவார். இதே போல இன்றும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

vijay pinch yogi babu cheek

இந்த வீடியோவில், “மீண்டும் சர்கார் செட்டிற்கு வந்துள்ளேன். இது யாருடைய கை என்று கெஸ் பண்ணுங்க” என்று வரலட்சுமி கேட்டுள்ளார். யோகி பாபுவின் கன்னத்தைக் கிள்ளும் வீடியோவில் தென்படும் கை யாருடையது எனப் பெரிதாக யோசிக்க வேண்டிய அவசியமில்லை.

விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருக்கும் யாராக இருந்தாலும், ஒரே வினாடியில் அது தளபதியின் கை என்று கூறுவார்கள். அதைத் தான் நெட்டிசன்கள் செய்து வருகின்றனர். யோகி பாபு கன்னம் கிள்ளும் நடிகரின் கை விஜய் கை என்று கூறி வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close