சர்கார் வீடியோ :
தளபதி விஜய் சர்கார் படத்தின் ஓப்பனிங் பாடலுக்கு, வெளிநாட்டு டான்ஸ்டர்களுடன் நடனம் ஆடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டான்ஸ் ஆடும் விஜய் :
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் ‘சர்கார்’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நாள் முதல் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருமடங்காக அதிகரித்துள்ளது.
ஆரம்பமே பிரச்சனை என்பது போல், போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போல் வெளியான போஸ்டர் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. அரசியல் தலைவர்கள் பலரும் போர்க்கொடி தூக்க கடைசியில் அந்த போஸ்டர் நீக்கப்பட்டது.
அதன் பின்பு சமூகவலைத்தளங்களில் நாள் தோறும் சர்கார் படம் குறித்த புதிய புதிய தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது சர்கார் படத்தின் படப்பிடிப்பு லாஸ் வேகாஸில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் ஓப்பனிங் பாடலை அங்கு படமாக்கி வருகின்றனர். நடன இயக்குநர் ஷோபி இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.
இந்த பாடலுக்கு நடிகர் விஜய் ஆடும் வீடியோ சோஷியல் மீடியாவில் லீக்காகியுள்ளது. 'நான் ஒரு ஏவுகணை வேண்டாமே வினை வினை’ எனத் தொடங்கும் இந்த பாடலுக்கு நடிகர் விஜய் நடனம் ஆடுகிறார். இந்த வீடியோவை ஷூட்டிங் ஸ்பாட்டில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார்.
இந்த பாடலுக்கு நடிகர் விஜய் உடன் நடனம் ஆடிய அமெரிக்க டான்ஸர்ள் பலரும் விஜய்யின் ஸ்டைல் மற்றும் ஸ்பீடை கண்டு வாயை பிளந்துள்ளனர். ஷூட்டிங் முடிந்த பின்பும் விஜய்யிடம் அவரின் டான்ஸ் பற்றி கூறி, செல்பியும் எடுத்துள்ளனர்.
டான்ஸர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம்
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.