அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் இடம் பெற்றுள்ள அயர்ன் மேன் போல ஒருவர் பச்சை நிற கமாண்டோ உடையை அணிந்து வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகியுள்ளது.
அவெஞ்சர்ஸ் எண்ட் கேமில் டோனி ஸ்டார்க் அயர்ன்மேன் உடையில் சாகசம் செய்வது பலரையும் கவர்ந்த ஒன்று அதே போல, சாஸ்தா என்பவர் பச்சை நிற கமாண்டோ உடையை தயாரித்து அணிந்துகொண்டு இரண்டு கைகளிலும் பல குழல்கள் கொண்ட டம்மி துப்பாக்கியை பொருத்திக்கொண்டு சாஸ்தா டோனி ஸ்டார்க் நடக்கிறார்.இந்த வீடியோப் பதிவு குறிப்பில், இது பயரங்கரவாதிகளுக்கு எதிராக போராடுவதற்கு உதவுவதற்காக இந்தியர் ஒருவர் வடிவமைத்துள்ள அயர்ன் மேன் உடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஒரு சின்ன பேட்டரியை பயன்படுத்தி துப்பாக்கிகளை வெடிக்க வைக்கிறார். சாஸ்தா டோனி ஸ்டார்க்கின் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளதால் சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.