Satellite picture of Mecca shared by Emirati astronaut Hazza Al Mansoori : சவுதி அரேபியாவில் அமைந்திருக்கும் பெரிய மசூதியான மெக்காவை தரிசனம் செய்வது ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமையாக போற்றப்படுகிறது. உலகில் பல்வேறு பகுதியில் இருந்து இங்கு வந்து பிரார்த்தனை செய்வதை பழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
Satellite picture of Mecca shared by Emirati astronaut Hazza Al Mansoori
அமீரகத்தை சேர்ந்த முதல் விண்வெளி ஆராய்ச்சியாளாரான ஹஸ்ஸா அல் மன்சூரி (Hazzaa Al Mansoori) விண்ணில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, மெக்காவின் சேட்டிலைட் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். அதில் “நம்பிக்கை உடையவர்களின் இதயம் வேண்டும் இடம், அவர்களின் நாக்குகள் ஜெபிக்கும் இடமான மெக்காவின் சேட்டிலைட் புகைப்படம்" என்று கேப்சனில் சேர்த்து ஷேர் செய்திருந்தார்.
அமீரகத்தில் இருந்து விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் விஞ்ஞானி இவர் ஆவார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து தன்னுடைய பயிற்சியை முடித்த பின்பு தற்போது எக்ஸ்பெடிசன் 61 திட்டத்தில் விண்வெளி சென்றுள்ளார். இந்த விண்வெளி ஆராய்ச்சியினை முகமது பின் ரஷித் விண்வெளி ஆராய்ச்சி மையம் மேற்பார்வையிட்டு வருகிறது.
Emirati astronaut Hazza Al Mansoori
இவருடன் நிக் ஹாஜ், அலேக்ஸெய் ஓவ்ச்சினின் ஆகியோரும் சோயுஸ் எம்.எஸ் 12 என்ற விண்கலத்தில்ன் மூலம் காலை 11.37 மணிக்கு வியாழக்கிழமை விண்ணில் இருந்து புறப்பட்டு கஜகஸ்தானில் மாலை 4 மணிக்கு தரையிறங்கினார்கள். மன்சூரி விண்வெளியில் இருக்கும் நேரத்தில் 128 முறை உலகை வலம் வந்துள்ளார். அது கிட்டத்தட்ட 5 மில்லியன் கிலோமீட்டர் பயணத்திற்கு சமமாகும்.