360° ராட்டினம் இரண்டாக உடைந்து விழுந்தது: கண்முன் நடந்த திகில் விபத்து!

முழு வேகத்தில் சுழன்று கொண்டிருந்த 360 டிகிரி ராட்டினம் திடீரென இரண்டாக உடைந்து விழுந்ததில், குழந்தைகள் உட்பட 23 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முழு வேகத்தில் சுழன்று கொண்டிருந்த 360 டிகிரி ராட்டினம் திடீரென இரண்டாக உடைந்து விழுந்ததில், குழந்தைகள் உட்பட 23 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
saudi-arabia

360° ராட்டினம் இரண்டாக உடைந்து விழுந்தது: கண்முன் நடந்த திகில் விபத்து!

சவுதி அரேபியாவின் டாய்ஃப் நகரில் உள்ள கேளிக்கை பூங்காவில் நிகழ்ந்த கோர விபத்தில், 360 டிகிரி சுற்றும் ராட்டினம் திடீரென உடைந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 23 பேர் படுகாயமடைந்தனர். விபத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

முழு வேகத்தில் சுழன்று கொண்டிருந்த கேளிக்கை ராட்டினத்தின் அதன் மையக் கம்பி பாதியாக உடைந்து கீழே விழுந்தது. "ஒரு விரிசல் ஒலி கேட்ட அடுத்த நொடியே ராட்டினம் அறுந்து கீழே விழுந்தது" என நேரில் பார்த்தவர்கள் விவரித்துள்ளனர். அதிவேகத்தில் சரிந்த ராட்டினத்தின் பாகங்கள் எதிர் பக்கத்தில் நின்றவர்களையும் தாக்கியுள்ளன. அத்துடன் ராட்டினத்தில் அமர்ந்திருந்தவர்கள் கீழே விழுந்ததால் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்த தகவலறிந்ததும், அவசர சேவைகள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் நலமடைந்து வருவதாகவும், ஆனால் 3 பேர் கவலைக்கிடமான நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ராட்டினத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புத் தரங்கள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இந்தாண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளாகி 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்னும் மனதில் நீங்காத வடுவாக இருக்கும் நிலையில், சவுதி அரேபியாவில் நடந்துள்ள இந்த விபத்து, கேளிக்கை பூங்காக்களில் பொதுமக்களின் பாதுகாப்பு எந்த அளவுக்கு கேள்விக்குறியாக உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: