Advertisment

பாத்ரூமில் 21 மணிநேரம்... மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றிய Wordle கேம்

மூதாட்டி வீட்டிற்கு ஜன்னலை உடைத்து, நிர்வாணமாக நுழைந்த நபர், அவரை மிரட்டி அடைத்து வைத்த நிலையில், வோர்டில் கேம் மூலம் காப்பாற்றப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
பாத்ரூமில் 21 மணிநேரம்... மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றிய Wordle கேம்

அண்மை காலமாக வோர்டில் கேம் விளையாடி, அதன் ஸ்கோரை சமூக வலைதளத்தில் பகிர்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த வோர்டில் கேம் ஸ்கோர் ஷேரிங் , தற்போது அமெரிக்காவில் 80 வயதான மூதாட்டியின் உயிரை காப்பாற்றியுள்ளது.

Advertisment

இல்லினாய்ஸின் சிகாகோவைச் சேர்ந்த 80 வயதான மூதாட்டி ஹோல்ட், தினமும் காலை வோர்டில் கேம் விளையாடி தனது ஸ்கோரை இரண்டு மகள்களுக்கும் அனுப்புவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

ஆனால், தாயார் ஸ்கோரை மெசேஜ் செய்யாததால், அவரது மகள்கள் கவலை அடைந்துள்ளனர். உடனடியாக மூதாட்டிக்கு கால் செய்தும், அவர் அழைப்பை எடுக்காததால், மூதாட்டி பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சென்று கதவை தட்டியும், யாரும் திறக்காததால் உள்ளூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் , வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் நுழைந்து, பேஸ்மண்ட் பாத்ரூமில் அடைத்துவைக்கப்பட்டிருந்த மூதாட்டியை மீட்டனர்.

காவல் துறை கூற்றுப்படி, மூதாட்டி வீட்டின் ஜன்னலை உடைத்து, நிர்வாணமாக நுழைந்த நபர், அவரை மிரட்டியுள்ளார். மூதாட்டி செல்போனை எடுத்துவைத்துக்கொண்டு, அவரை பேஸ்மண்ட் பாத்ரூமில் வைத்து பூட்டி வைத்துவிட்டதாக தெரிகிறது. சுமார் 21 மணி நேரம்,மூதாட்டில் பாத்ரூமில் அடைத்து வைக்கப்பட்டிருந்துள்ளார்.

இறுதியாக, ஸ்வாட் குழுவின் அதிரடி தேடுதல் வேட்டையில், அந்த அடையாளம் தெரியாத நபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment