கன்னடத்தில் பேசவே மாட்டேன் என அடம்பிடித்த எஸ்.பி.ஐ மேலாளர் கன்னடத்தில் மன்னிப்பு!

கர்நாடகாவில் கன்னடத்தில் பேச மாட்டேன், இந்தியில் தான் பேசுவேன் என வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்த SBI வங்கி மேலாளர் வேறு மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவர் கன்னடத்தில் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

கர்நாடகாவில் கன்னடத்தில் பேச மாட்டேன், இந்தியில் தான் பேசுவேன் என வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்த SBI வங்கி மேலாளர் வேறு மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவர் கன்னடத்தில் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
karnataka sbi manager

கன்னடத்தில் பேசவே மாட்டேன் எனக் கூறிய எஸ்.பி.ஐ பெண் மேலாளர் கன்னடத்தில் மன்னிப்பு!

கர்நாடகாவில் கன்னடத்தில் பேச மாட்டேன், இந்தியில் தான் பேசுவேன் என வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்த SBI வங்கி மேலாளர் வேறு மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர் கன்னடத்தில் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

Advertisment
தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரா போன்ற பிராந்திய மொழி பேசப்படும் மாநிலங்களில் தாய் மொழி மீதான பற்று என்பது தீவிரமாக இருப்பதால், இங்கெல்லாம் மொழித் திணிப்பு அல்லது வேற்று மொழி பேசுபவர்களால் அவ்வப்போது மொழிப் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், அண்மையில் கர்நாடக மாநில தலைநகரமான பெங்களூருவில் புறநகர் பகுதியான சூர்யநகராவில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளருக்கும், மேலாளருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நான் எப்போதும் கன்னடத்தில் பேசமாட்டேன், நான் இந்தியன், இந்தியில் தான் பேசுவேன் என வாடிக்கையாளரிடம் கறாராக பேசிய வங்கி பெண் மேலாளர் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி கன்னடர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம்: இந்த விவகாரம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் கவனத்துக்கும் சென்ற நிலையில், கன்னட மொழியை அவமதிப்பை ஏற்க முடியாது, இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார். அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும். அதோடு, உள்ளூர் மொழியில் பேசுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். நாடு முழுவதுமுள்ள அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் கலாசார மற்றும் மொழிப் பயிற்சியை கட்டாயமாக்குமாறு மத்திய நிதியமைச்சர் மற்றும் நிதி சேவைகள் துறையை நான் கேட்டுக்கொள்கிறேன். உள்ளூர் மொழிகளை மதிப்பதென்பது மக்களை மதிப்பதாகும்." என்று பதிவிட்டு இருந்தார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, சம்மந்தப்பட்ட பெண் மேலாளரை எஸ்.பி.ஐ வங்கி வேறு மாநிலத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கன்னடத்தில் மன்னிப்பு கேட்ட பெண் மேலாளர்: இந்நிலையில், கன்னடத்தில் பேச மாட்டேன், இந்தியில்தான் பேசுவேன் என வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்த எஸ்.பி.ஐ வங்கி பெண் மேலாளர் கன்னடத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Karnataka

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: