ஆப்பிரிக்க காடு; எதிர் நோக்கி வரும் ஒட்டகச் சிவிங்கி! சாமர்த்தியமாய் தப்பித்த இளைஞர்

. இந்த வீடியோ குறித்தும் அந்த சுற்றுலா பயணிகள் குறித்தும உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

A biker encounter with a giraffe : தென்னாப்பிரிக்காவில் இருக்கும் விலங்குகளை பார்ப்பதற்காகவே அந்நாட்டிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மிகவும் அதிகம். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு சென்று சைக்கிளில் அங்கிருக்கும் இயற்கை அழகை ரசிக்க சென்ற இருவர்களுக்கு கிடைத்த வரவேற்பைப் பாருங்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு எர்த்பிக்ஸ் என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஹிட் அடித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ளனர்.

சைக்கிளில் பயணித்து வந்த சுற்றுலா பயணியை எதிர்கொண்டு வரவேற்கிறது ஒட்டகச்சிவிங்கி ஒன்று. அதனை பார்த்ததும் அங்கிருந்து ஓடவோ, அல்லது அதனை அச்சுறுத்தவோ இல்லாமல் அமைதியாக, தன்னை நெருங்கும் போதெல்லாம் தலையை கீழே தனித்து நின்று விடுகிறார். இந்த வீடியோவை பார்க்கவே ”ரொம்ப ரொம்ப க்யூட்டா இருக்கு” என்று தான் சொல்ல வேண்டும். இந்த வீடியோ குறித்தும் அந்த சுற்றுலா பயணிகள் குறித்தும உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Scary but awesome a biker encounter with a giraffe in south africa

Next Story
நகையை அடகு வைத்து இப்படி ஒரு உதவியா? கோவை தம்பதிக்கு குவியும் பாராட்டு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express