‘குக்கூ..குக்கூ மாஸ்க் அணிந்து செல்லுங்கள்’ – மாணவர்களின் வைரல் வீடியோ

இணையத்தில் ஹிட் அடித்த குக்கூ..குக்கூ பாடலைபாடி பள்ளி மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

corona awareness

கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி முக்கிய பங்கு வகித்தாலும், மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவை தான் முதன்மையான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகும். 
ஆனால், தற்போது மக்கள் பலரும் மாஸ்க் அணியாமல் செல்வதைக் காண முடிகிறது. அவர்களின் அலட்சியத்தைப் போக்கிடச் சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், பள்ளிக்கு வந்திருக்கும் மாணவர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மறந்துவிடக்கூடாது என்பதற்காக, மாணவிகள் சிலர், சமீபத்தில் இணையத்தில் ஹிட் அடித்த குக்கூ..குக்கூ பாடலை பாடி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.


அதில், ‘குக்கூ..குக்கூ.. மாஸ்கை அணிந்து செல்லுங்கள்; குக்கூ..குக்கூ.. சானிடைசர் போடுங்கள்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோவை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் தனது ட்விட்ர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
அதில், “திருவள்ளூர் பள்ளி மாணவர்களின் அற்புதமான விழிப்புணர்வு பாடல்” எனப் பதிவிட்டுள்ளார். பள்ளி மாணவர்களின் குக்கூ..குக்கூ விழிப்புணர்வு பாடல், சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: School students corona awareness song

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com