தேவராவில் தாவூதி பாடலுக்கு பள்ளிச் சிறுவன் மின்னல் டான்ஸ்; ஜூனியர் என்.டி.ஆர் பாராட்டு: வைரல் வீடியோ

ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவரா படத்தில் இடம்பெற்ற தாவூதி பாடலுக்கு பள்ளிச் சிறுவர்களின் குரூப் டான்ஸ் பயிற்சியில் ஒரு சிறுவன் மின்னல் மாதிரி நடனம் ஆடியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை 29 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவரா படத்தில் இடம்பெற்ற தாவூதி பாடலுக்கு பள்ளிச் சிறுவர்களின் குரூப் டான்ஸ் பயிற்சியில் ஒரு சிறுவன் மின்னல் மாதிரி நடனம் ஆடியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை 29 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
dance school boy

தேவாரா படத்தில் இடம்பெற்ற 'தாவூதி' பாடலுக்கு பள்ளி மாணவனின் அற்புதமான நடனத்தைப் பார்த்த ஜூனியர் என்.டி.ஆர் பாராட்டியுள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவரா படத்தின் 'தாவூதி' பாடலுக்கு ஒரு சிறுவன் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஒரு பள்ளி திருவிழாவின் போது எடுக்கப்பட்டது. இந்த வீடியோவில் மாணவர்கள் குழு ஒரு துடிப்பான நடன ஒத்திகை பார்ப்பதை காட்டுகிறது. ஆனால், இந்த குரூப் டான்ஸ் ரிகர்சலில் நடுவில் இருக்கும் சிறுவன் அனைவரின் பார்வைகளையும் கவர்ந்துவிட்டான்.

Advertisment

செம எனர்ஜியோட அந்த சிறுவன் ஆடும் டான்ஸ் அப்படியே ஜூனியர் என்.டி.ஆர் கண்முன்னால் நிற்பது போல இருக்கிறது. எல்லா ஸ்டெப்பையும் ரொம்ப இயல்பாக ஆடுகிறான். உண்மையில் பார்ப்பவர்களை உற்சாகப்படுத்தக் கூடியது. அவரது தன்னம்பிக்கை முழு மேடையையும் ஒளிரச் செய்கிறது. உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில், நடன இயக்குனர் இறுதியில் குழுவை வழிநடத்த வருகிறார். ஆனால், அந்த குட்டி பையன், ஒரு நொடி கூட தடுமாறவில்லை. சும்மா மின்னல் மாதிரி அதே மாஸ் டான்ஸைத் தொடருகிறான். அந்த சிறுவன் மறுக்க முடியாத திறமையுடன் நடனமாடுகிறார். உண்மைய்ல், இந்த வீடியோவில் அந்த சிறுவன்தான் ஸ்டார்.

இந்த வீடியோவில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், குரூப் டான்ஸில் மற்றொரு மாணவர் ஒரு கண்ணாடியைக் கொடுக்கிறார். அந்த கண்ணாடியை வாங்கி அணிந்துகொண்டு டான்ஸ் ஸ்டெப்பையும் தவறவிடாமல், ஸ்டைலாக டான்ஸ் ஆடுகிறார். அந்த கண்ணாடியை பக்கத்தில் இருக்கும் மற்றொரு மாணவர் வாங்கிக்கொள்ளும்போது கொடுத்துவிட்டு, அந்த குட்டிப் பையன் விடாமல் அதே ஃபயர், அதே எனர்ஜியுடன் டான்ஸ் ஆடுகிறார். இந்த வீடியோ எல்லா இடங்களிலும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது, தாவூதி பாடலின் கவர்ச்சிகரமான இசை மட்டுமல்ல, இந்த வளரும் நடனக் கலைஞரின் உணர்வையும் கொண்டாடுகிறது.

இந்த வீடியோவைப் பாருங்கள்:

Advertisment
Advertisements


இந்த டான்ஸ் வீடியோ உடனடியாக பரபரப்பை ஏற்படுத்தியது, 29 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. சிறுவனின் மின்னல் மாதிரியான டான்ஸ் ஸ்டெப்கள் ஜூனியர் என்.டி.ஆரையும் ஈர்த்தது. பள்ளிச் சிறுவனின் டான்ஸைப் பார்த்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். “ரொம்ப அழகானது,” என்று அவர் கருத்து தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் ரசிகர்கள் அந்த ஸ்டார் குட்டி பையனுக்கு தங்கள் அன்பை பொழிந்து வருகின்றனர். ஒரு பார்வையாளர், “அவரைப் போலவே நடித்தவர்தான் என் வாழ்க்கையில் எனக்குத் தேவையான ஒரே சகோதரர்” என்றார். மற்றொருவர், “வேறு எதையும் பற்றி கவலைப்படாதது போல் நடனமாடுங்கள்” என்று எழுதினார்.

கொரட்டாலா சிவா இயக்கிய தேவரா: பகுதி 1 படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்தார். இந்த படத்தில் ஜான்வி கபூர், சைஃப் அலி கான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் மற்றும் ஷைன் டாம் சாக்கோ ஆகியோரும் நடித்தனர். இந்த படத்தில்தான் சைஃப் அலிகான் மற்றும் ஜான் வி கபூர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்கள்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: