உயரம் மீது இருக்கும் பயத்தை போக்க இப்படியும் ஒரு சாகசமா ? உலகையே வியக்க வைத்த ஸ்காட்லாந்து பைக்கர்...

ஹெலிகாப்ட்டரில் இருந்து சைக்கிளுடன் குதித்து சாகசம் செய்துள்ளார். வேறெந்த பாதுகாப்பு அம்சங்களையும் அவர் பெற்றிருக்கவில்லை. 

Scottish biker Kriss Kyle : சாகக விரும்பிகளுக்கு அனைத்திலும் புதுமையும் வித்தியாசமும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மலையேற்றம் தொடங்கி, மிகவும் சாதாரண மிதிவண்டி ஓட்டுதலையும் கூட வித்தியாசமாக செய்வது தான் இவர்களின் வழக்கம் போல.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த க்ரிஸ் கெய்ல் என்பவர், உலகின் உயரமான கட்டிடமான துபாய் புர்ஜ் அல் அராப் ஸ்கைஸ்கிராப்பர் மேல் தளத்திற்கு, ஹெலிகாப்ட்டரில் இருந்து சைக்கிளுடன் குதித்து சாகசம் செய்துள்ளார். வேறெந்த பாதுகாப்பு அம்சங்களையும் அவர் பெற்றிருக்கவில்லை.

Scottish biker Kriss Kyle – வீடியோ

ஹெலிகாப்டரில் இருந்து 16 அடி கீழே இருக்கும் கட்டிடத்தின் மேல்பகுதியில் வெறும் ஹெல்மெட் அணிந்து கொண்டு குதித்துள்ளார். உயரம் மட்டும் இல்லை மேல்தளத்தில் இருக்கும் காற்றும் கூட அதிக அளவில் பயத்தை ஏற்படுத்தும் நிலையில் இவரின் இந்த சாகச வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

26 வயதான க்ரிஸ் கெய்லிற்கு உயரம் என்றால் மிகவும் பயமாம். அந்த பயத்தினைப் போக்கவே இந்த வீரசாகசத்தில் ஈட்பாட்டார் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : மலையேற்ற சாகசப் பிரியர் கீழே விழுந்து பலி

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close