நிலநடுக்க பீதி... கடலில் ‘டைவ்’ அடித்த கடல் சிங்கங்கள்: வைரல் வீடியோ

ரஷ்யாவின் குரில் தீவுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது, ஆபத்தை உணர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டெல்லர் கடல் சிங்கங்கள் குன்றின் மீது இருந்து கடலுக்குள் குதிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

author-image
WebDesk
New Update
sea lion

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் கடந்த புதன்கிழமை அன்று 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அன்ட்சிஃபெரோவ் தீவில் இருந்த சுமார் 30 ஸ்டெல்லர் கடல் சிங்கங்கள் அச்சத்தில் கடலுக்குள் குதித்தன.

ரஷ்யாவின் குரில் தீவுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது, ஆபத்தை உணர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டெல்லர் கடல் சிங்கங்கள்  குன்றின் மீது இருந்து கடலுக்குள் குதிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் கடந்த புதன்கிழமை அன்று 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அன்ட்சிஃபெரோவ் தீவில் இருந்த சுமார் 30 ஸ்டெல்லர் கடல் சிங்கங்கள் அச்சத்தில் கடலுக்குள் குதித்தன. இந்த அரிய காட்சியை ஒரு சுற்றுலாப் பயணி வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

Advertisment
Advertisements

சுனாமி எச்சரிக்கை:

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் ஹவாய் மாகாணம் ஆகியவற்றின் சில பகுதிகளில் வசிக்கும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டனர்.

எனினும், ஹவாய் அதிகாரிகள் பின்னர் சுனாமி எச்சரிக்கையைத் திரும்பப் பெற்றனர். ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் 30 செ.மீ. உயரத்திற்குச் சுனாமி அலைகள் வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், நிலநடுக்கத்திற்கு முன்பே கம்சட்காவில் ஐந்து பெலுகா திமிங்கிலங்கள் (beluga whales) கரை ஒதுங்கிய வீடியோவும் வெளியாகியுள்ளது.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: