புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்ணின் இறுதி “கீமோ”; உற்சாகமாக வழி அனுப்பிய நண்பர்கள்!

மெர்சி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக புற்றுநோயால் பாதித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Seattle residents line up to cheer girl on the day of her last chemo treatment : சியாட்டிலில் வசித்து வரும் சிறுமி ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு அவதியுற்று வந்தார். 500க்கும் மேற்பட்ட சியாட்டில் நகரவாசிகள் அவரின் இறுதி கீமோ தெரப்பி சிகிச்சைக்காக வாழ்த்தி வழி அனுப்பும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு நிமிட வீடியோவை குட்நியூஸ் கரஸ்பாண்டெண்ட் என்ற ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது. அதில் மெர்சி என்ற அந்த சிறுமிக்கு ஆதரவாக பலூன்கள், சிறப்பு வாழ்த்து அட்டைகள் ஆகியவற்றை காட்டி வழி அனுப்பி வைக்கின்றனர் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள். அவர்கள் அனைவருக்கும் மகிழ்ந்த முகத்துடன் நன்றி சொல்லி வருகிறார் மெர்சி. மெர்சி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக புற்றுநோயால் பாதித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட 4 லட்சத்து 60 ஆயிரம் நபர்கள் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்து பலரும் தங்களின் வாழ்த்துகளையும், பிரார்த்தனைகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்தும், அக்கம் பக்கத்தினர் தரும் உற்சாகம் குறித்தும் உங்களின் கருத்துகள் என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் பதிவு செய்யவும்.

Web Title: Seattle residents line up to cheer girl on the day of her last chemo treatment

Next Story
கேன்சரால் உயிரிழந்த சிறுமி… கல்நெஞ்சக்கார தந்தையிடம் பணஉதவி கேட்டு கெஞ்சிய விடியோ!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com