காமராஜர் மறைவுக்கு கதறி அழுத அண்ணா? நிக்சனை சந்திக்க மறுத்த காமராஜர்? சீமான் சர்ச்சைக்கு நெட்டிசன் ரியாக்ஷன்

காமராஜர் மறைவுக்கு அண்ணா கதறி அழுதார் என்றும் அமெரிக்கா சென்ற அண்ணாவை சந்திக்க மறுத்த நிக்சன் இந்தியா வந்தபோது காமராஜர் சந்திக்க மறுத்தார் என்றும் சீமான் கூறியது சமூக ஊடகங்களில் சர்ச்சைப் புயலைக் கிளப்பி உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் ரியாக்ஷன் செய்து வருகின்றனர்.

காமராஜர் மறைவுக்கு அண்ணா கதறி அழுதார் என்றும் அமெரிக்கா சென்ற அண்ணாவை சந்திக்க மறுத்த நிக்சன் இந்தியா வந்தபோது காமராஜர் சந்திக்க மறுத்தார் என்றும் சீமான் கூறியது சமூக ஊடகங்களில் சர்ச்சைப் புயலைக் கிளப்பி உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் ரியாக்ஷன் செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Annadurai Seeman Kamaraj

நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேடைப் பேச்சுகளில் சுவாரசியமான பல கதைகளைக் கூறுவார். அதுபோலதான், காமராஜர் மறைவுக்கு அண்ணா கதறி அழுதார் என்று இப்போது சீமான் கூறியதும் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சகோதரர் மு.க. முத்து மறைவுக்கு நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறிய பின்னர், காமராஜர் மறைவுக்கு அண்ணா கதறி அழுதார் என்றும் அமெரிக்கா சென்ற அண்ணாவை சந்திக்க மறுத்த நிக்சன் இந்தியா வந்தபோது காமராஜர் சந்திக்க மறுத்தார் என்றும் கூறியது இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் சர்ச்சைப் புயலைக் கிளப்பி உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் ரியாக்ஷன் செய்து வருகின்றனர்.

Advertisment

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சகோதரர் மு.க. முத்து உடல்நலக் குறைவால் சனிக்கிழமை (19.07.2025) காலமானார். அவருடைய மறைவுக்கு நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்தார். ஆனால், நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை.

இந்நிலையில், நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மு.க. முத்து மறைவுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தி.மு.க-வை கடுமையாக விமர்சித்து வரும் சீமான், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது தமிழக அரசியலில் கவனம் பெற்றது. அதைவிட, இந்த சந்திப்புக்குப்பின், பேசியது இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு சர்ச்சைப் புயலைக் கிளப்பியுள்ளது. சீமான் அப்படி என்ன பேசினார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: “நான் ஒருமுறை நீண்ட நேரம் பசியுடன் வெயிலில் நின்றபோது மயங்கி விழுந்துவிட்டேன். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்னை உடனே அழைத்து, உடம்பை கவனமாகப் பார்த்துக்கொள்வது இல்லையா, இப்படியா இருப்பது என்று அன்பாக விசாரித்தார்” என்று கூறினார். 

Advertisment
Advertisements

தொடர்ந்து பேசிய சீமான், தனது தந்தை இறந்தபோது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறினார் என்றும் அமைச்சர் பெரிய கருப்பனை ஆறுதல் கூற அனுப்பி வைப்பதாகவும் கூறியதாக சீமான் நினைவுகூர்ந்தார். 

மேலும், அரசியலில் கொள்கை கோட்பாடு முரண்களைத் தாண்டி, அரசியல் நாகரிகம் மலர வேண்டும் எனக் கூறிய சீமான், காமராஜர் மறைந்தபோது அண்ணா கதறி அழுதார் என்பார்கள். அதே போல, அண்ணா அமெரிக்கா போகும்போது நிக்சனை சந்திக்க அண்ண விரும்புகிறார், நிக்சன் அனுமதி தரவில்லை. அண்ணாவை சந்திக்க மறுத்தார் என்றும் அதனால், நிக்சன் இந்தியா வரும்போது காமராஜரை சந்திக்க விரும்புகிறார். அதற்கு, காமராஜர், நம்ம அண்ணாதுரையை சந்திக்காத நிக்சனை ஏன் சந்திக்க வேண்டும் என்று சந்திக்க மறுத்ததாக சீமான் கூறியுள்ளார். 

சீமானின் இந்த பேச்சுதான் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் சர்ச்சையாகி உள்ளது. இதில் என்ன சர்ச்சை என்றால், தி.மு.க தலைவர் அண்ணாவும் - காங்கிரஸ் மூத்த தலைவர் காமராஜரும் எதிரெதிர் துருவங்களாக இருந்தனர். இதில், அண்ணா பிப்ரவரி 3, 1969-ல் தனது 59வது வயதில் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். காமராஜர் அக்டோபர் 2, 1975-ல் காலமானார். இப்படி இருக்கும்போது, காமராஜர் மறைவுக்கு அண்ணா எப்படி கதறி அழுதிருக்க முடியும் என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி எதிர்வினையாற்றி வருகின்றனர். 

நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேடைப் பேச்சுகளில் சுவாரசியமான பல கதைகளைக் கூறுவார். அதுபோலதான், காமராஜர் மறைவுக்கு அண்ணா கதறி அழுதார் என்று இப்போது சீமான் கூறியதும் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வி நியூஸ் என்ற யூடியூப் சேனலில் சீமான் பேட்டி வீடியோ பதிவில், ஒரு பார்வையாளர், “அண்ணா மறைந்தது 1969..கர்மவீரர் மறைந்தது 1975...அண்ணன் சீமான் பேசுவதற்கு முன் யோசித்து பேசவேண்டும்...” என்று கூறியுள்ளார்.

மற்றொரு பயனர், “அண்ணா 69 லிலேயே மறைந்துவிட்டார்.” என்று தெரிவித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் தனது முகநூல் பக்கத்தில், “இன்னொரு கதை?” என்று குறிப்பிட்டு சீமான் பேச்சு குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “1975இல் காமராஜ் இறந்தபோது 1968இல் இறந்த அண்ணா அழுத கதை இருக்கட்டும். 

அண்ணா அமெரிக்கா சென்ற போது அன்று உப குடியரசுத் தலைவராக இருந்த ரிச்சர்ட் நிக்சனை சந்திக்க விரும்பியதாகவும் அவர் மறுத்து விட்டதாகவும் கூறுகிறார் சீமான். அது உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் நிக்சன் அண்ணாவை சந்திக்க மறுத்ததால் கோபம்/வருத்தம் அடைந்த காமராஜ், நிக்சன் இந்தியாவுக்கு வந்தபோது அவரை சந்திக்க மறுத்து விட்டதாகவும் கூறுகிறார் சீமான். 

முதல்வர் அண்ணா அமெரிக்காவுக்கு ஏப்ரல்-மே, 1968இல் சென்றார். அதே ஆண்டு செப்டம்பரில் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா சென்றார். உப குடியரசுத் தலைவராக நிக்சன் இந்தியாவுக்கு வந்தது நவம்பர் 1953இல். சென்னையில் துவங்கியது அவரது பயணம். ஐந்து மணி நேரம் சென்னையில் இருந்தபோது அவர் 90 நிமிடங்கள் முதல்வர் ராஜாஜியுடன் பேசிக் கொண்டிருந்தார் என்று தி இந்து செய்தி கூறுகிறது (கமெண்ட் பகுதியில் செய்தி).

1968இல் நிக்சன் அண்ணாவை சந்திக்கவில்லை என்பதற்காக 1953இலேயே காமராஜுக்கு கோபம் வந்து விட்டதா?
அடுத்த முறை அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக நிக்சன் இந்தியாவிற்கு வந்தது ஜூலை 31, 1969இல். இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க குடியரசுத் தலைவர்  அவர்தான். 23 மணி நேரம் மட்டுமே டெல்லியில் இருந்த அவர் பிரதமர் இந்திராவையும், உப குடியரசுத் தலைவர் ஹிதாயதுல்லாவையும் மட்டுமே சந்தித்தார். 

காமராஜ், மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் இந்திரா காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டு அவரை வெளியேற்றுவதற்கு முற்பட்ட நேரத்தில் இந்த விஜயம் நடந்ததால் அப்போதும் காமராஜ் நிக்சன் மீதான  கோபத்தைக் காட்டியிருக்க வாய்ப்பில்லை. (நவம்பர் 12, 1969இல் இந்திரா காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட, கட்சி இரண்டாக உடைந்தது). அந்த நேரத்தில் அண்ணா உயிருடன் இல்லை.

எங்கே தேடுவேன்? உண்மையை எங்கே தேடுவேன்?” என்று பதிவிட்டுள்ளார். 

Seeman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: