Seeman viral audio : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்ட ஆடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழக பிரதான கட்சிகள், வேட்பாளர் விபரங்கள், தொகுதி பட்டியல், தேர்தல் அறிக்கை என பரபரப்பாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனியாக நிற்கின்றது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சீமான் தனது கட்சி தொண்டரிடம் ஆவசேமாக பேசும் ஆடியோ ஒன்று தற்போது லீக் ஆடியுள்ளது. சீமான் கோபக்காரர் என்பது அதிகமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆனால் கட்சி தொண்டரிடமே சீமான் இவ்வளவு கோபமாக பேசுவாரா? என அனைவரையும் வியப்பட வைத்திருக்கிறது இந்த ஆடியோ.
அந்த ஆடியோ இடம் பெற்றிருக்கும் உரையாடல் இது தான்.
அதில், “அந்த பொண்ணுக்கு சீட் கேட்டியாமே? நீ சொன்னா சீட் கொடுத்துடுவோமா? சீட் பற்றி முடிவு செய்ய நீ யார்? என்று சீமான் கேட்க பதில் கூறும் நபர்,”கட்சிக்காக உழைப்பவன் கேட்கிறேன் இதில் என்ன தப்பு? என்று பவ்யமாக பதில் கூறுகிறார். ஆனால் அதற்கும் ஆவேசமாக பேசும் சீமான், “சும்மா இருப்பதாக இருந்தால் கட்சியில் இரு இல்லையேல் போய்விடு” என்று கூறுகிறார். ஆனால் பதில் கூறும் அந்த நபர் அதெல்லாம் போக முடியாது இது நாம் வளர்த்த கட்சி என்பதாக அந்த ஆடியோ போகிறது.
சீமான் நான் சொல்வதற்குத்தான் சீட் நான் சொல்லும் வேலையை செய் இல்லை என்றால் அதற்கு தொண்டர் நீங்களே இப்படி பேசலாமா என்று கேட்க நீங்களே தான் சொல்கிறேன் நான் சொல்வதை கேட்பதுதான் உன் வேலை என்றார் சற்று கோபமாக கூறுகிறார். அதற்கு அந்த தொண்டர் கடைசி வரை நாங்கள் போஸ்டர் ஓட்ட வேண்டியது தானா என்கிறார்.
தேர்தல் நேரத்தில் வெளியாகியுள்ள இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இது சீமானின் குரல்தானா? அல்லது தேர்தலுக்காக சீமான் மீது அவதூறு பரப்பும் வகையில் வெளியான ஆடியோவா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.