New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-21-at-11.16.14.jpeg)
மின்சார துறை அமைச்சருக்கு கோவையில் ஒட்டப்பட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று 47-வது பிறந்த காண்கிறார்.
மின்சார துறை அமைச்சருக்கு கோவையில் ஒட்டப்பட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று 47-வது பிறந்த காண்கிறார்.
அவருக்கு அமைச்சர்கள் அரசு அலுவலர்கள், ஆதரவாளர்கள், திமுக கட்சியினர், பொதுமக்கள் என பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாநகரில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் அவரது துறையை குறிபிட்டு காட்டும் வகையில் "Happy Birth Day" மின்சார கண்ணா" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் திமுக கட்சியின் முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் புகைப்படம், தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி மலர் கொத்து அளித்த புகைப்படம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உட்பட கோவை மாநகர திமுக நிர்வாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த போஸ்டர்கள் கோவை மாநகரில் அவினாசி சாலை மேம்பாலத்திலும், உக்கடம்,ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.