பெண் குழந்தையை பெற்றெடுத்தார் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்

டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸூக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸூக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பெண் குழந்தையை பெற்றெடுத்தார் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்

டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸூக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Advertisment

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை 35 வயதான செரீனா வில்லியம்ஸ் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளர். "சினாப்சாட்" தளத்தில் தவறுதலாக பதிவிட்ட புகைப்படம் ஒன்றால், தற்செயலாக கடந்த ஏப்ரல் மாதம் தான் கர்ப்பமாகி இருப்பதை செரீனா ஒப்பு கொண்டார். மேலும், தனது காதலரான ரெட்டிட் இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனரா தொழிலதிபர் அலெக்சிஸ் ஒஹானியனை குழந்தை பிறந்த பிறகு இந்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

செரீனா கர்ப்பமாக இருந்தபோது, விளையாடிய ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் கோப்பையை வென்றது கவனிக்கத்தக்கது. பின்னர், மருத்துவரின் அனுமதியுடன் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடி பட்டம் வென்றதையும் நினைவு கூர்ந்த அவர், ‘வேனிட்டி பேர்’ என்ற இதழின் அட்டைப்பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை காட்டும் நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வெஸ்ட் செயின்ட் மேரிஸ் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அழகான பெண் குழந்தை ஒன்றை செரீனா பெற்றெடுத்துள்ளார்.

Advertisment
Advertisements

செரீனாவுக்கு குழந்தை பிறந்துள்ள செய்தி, டென்னிஸ் விளையாட்டு உலகை உற்சாகம் அடைய செய்திருக்கிறது. விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களிடம் இருந்து செரீனாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அவருக்கு குழந்தை பிறந்த விஷயம், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

Serena Williams Tennis

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: