ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 4 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தின்போது தனது இளைய மகள் இந்தியக் கொடியை ஏந்தி நின்றது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் ஷயீத் அப்ரிடி தெரிவித்தார். பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அப்ரிடி, தனது மகள் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்தியக் கொடியை ஏந்தி நின்றதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த சூப்பர் 4 லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. முன்னதாக ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப்பாகும் சாமா டிவி-யில் பேசிய அப்ரிடி, இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின்போது தனது குடும்பத்தினர் மைதானத்தில் இருந்ததாகவும், கேலரியில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் 90 சதவீதம் இந்தியர்கள் இருந்தார்கள் என்றும் அதில் 10 சதவீதம் பேர் மட்டுமே பாகிஸ்தான் பார்வையாளர்கள் இருந்ததாகவும் அவருடைய மனைவி தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும், மைதானத்தில் ஒரு பாகிஸ்தான் கொடிகூட கிடைக்காததால், தனது இளைய மகள் போட்டியின்போது இந்தியக் கொடியை ஏந்தி நின்று அசைத்துக் கொண்டிருந்ததாக அப்ரிடி கூறினார். அவர் தனது மகள் இந்தியக் கொடியை ஏந்தி நின்று அசைப்பது போன்ற வீடியோக்களை பெற்றதாகவும் ஆனால் அவற்றை சமூக ஊடகங்களில் வெளியிடவில்லை என்றும் அவர் சிரித்துக்கொண்டே கூறினார்.
அஃபிரிடி பேசிய வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டதையடுத்து, “பாகிஸ்தானியர்கள் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டவர்கள். இந்தியாவில் இருந்து மதிக்கிறோம்.” என்று நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
“இது லாலா இந்தியக் கொடிக்கு முழு மரியாதை செலுத்துகிறார். இந்தியா எங்கள் எதிரி அல்ல” என்று மற்றொரு கருத்து தெரிவித்துள்ளார். “லாலா எப்போதும் உயரத்தில் இருக்கிறார்” என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காரரகவும் லெக்ஸ்பின் பந்தை புயல் வேகத்தில் வீசுபவராகவும் இருந்தவர் சயீத் அஃபிரிடி. மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுபவராக இருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அஃப்ரிடி பாகிஸ்தான் ரசிகர்களால் லாலா என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். லாலா என்றால் சிங்கம் என்று அர்த்தம்.
ஆசியக் கோப்பை போட்டியில் சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணியில், விராட் கோலி 60 ரன்கள் எடுக்க, 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி ஒரு பந்து மீதி இருந்த நிலையில், ஐந்து விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 71 ரன்களையும் முகமது நவாஸ் 42 ரன்களையும் எடுத்தனர். இருப்பினும், பாகிஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வியடைந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”