பெற்ற மகள் என்றாலும், உதட்டில் முத்தம் இடலாமா? சர்ச்சையில் ஐஸ்வர்யாராய்

மகளை பாலியல் வன்கொடுமை செய்கிறார்

By: Updated: May 19, 2018, 03:16:02 PM

சமீபத்தில் நடந்த கேன்ஸ் 2018 படவிழாவில்  தனது மகளிடம் ஐஸ்வர்யா ராய்  நடந்துக் கொண்ட விதம் சமூகவலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

வருடந்தோறும் பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் படவிழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் தவறாமல் கலந்துக் கொள்வார்.  போன வருடம் சிண்ட்ரல்லா உடை,  இம்முறை பட்டாம்பூச்ச்சி கவுண் என்று  ஃபேனில்  தி பெஸ்ட்  என்பதை  ஒவ்வொரு வருடமும் நிரூபித்து விடுவார்.

ஆனால், இம்முறை  ஐஸ்வர்யா ராயுடன்  புதிய சர்சையும் ஒட்டிக் கொண்டது. ஆமாம் தனது செல்ல மகள் ஆராதயாவுடன் ஐஸ்வர்யா ராய் 71 ஆவது  கேன்ஸ்  படவிழாவில் கலந்துக் கொள்ள பிரான்ஸ் சென்றிருந்தார். அப்போது தனது மகளுடன் லிப் டூ லிப் முத்தம் கொடுத்து  புகைப்படம் ஒன்றை எடுத்திருந்தார்.  அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.  இந்த புகைப்படம் தான் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற எந்த சோஷியல் மீடியாக்கள் பக்கமும் வராத முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், சமீபத்தில் தான் இன்ம்ஸ்டாகிராம் பக்கத்தில் தலையை எட்டி காண்பித்தார். காரணம், அவர் வரும் எதிர்மறையான விமர்சனங்களை அவர் எதிர் கொள்ள  தயாராக இருந்ததில்லை.

அதன் காரணமாக ஊடகங்கள், சமூகவலைத்தளங்கள் இவை எல்லாவற்றையும் அவர் தவிர்த்தார். இதயெல்லாம் தாண்டி இன்ஸ்டாகிராமில் வந்தவர், தன் மகளின் உதட்டில் முத்தம் இடும்படியான புகைப்படத்தை பகிர்ந்தது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

மேற்கத்திய கலாச்சாரத்தை போல்  ஐஸ்வர்யா தனது மகளுக்கு உதட்டில் முத்தம்  கொடுத்து இருப்பது தவறு என்றும்,  தன்னுடைய சொந்த மகளாக இருந்தாலும் 5 வயது பெண் குழந்தைக்கு இப்படி உதட்டில் முத்தம் கொடுப்பது கேவலமான செயல் என்று  நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்,

View this post on Instagram

Circle of Life ????????✨

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on

சிலர், அனுமதி இல்லாமல் ஐஸ்வர்யா ராய் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்கிறார், இழிவான செயல் என்று  கடுமையான  வார்த்தைகளால் ஐஸ்வர்யா ராயை திட்டி தீர்த்துள்ளனர்.

 

View this post on Instagram

LOVE LOVE LOVE ????…. n RESPECT✨✨✨@helenmirren

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Shame on those trolling aishwarya for kissing daughter aaradhya

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X