Advertisment

டெல்லி எய்ம்ஸில் பிரபல நாட்டுப்புற பாடகி அனுமதி: கூகுள் தேடல் ட்ரெண்டிங்கில் 'சாரதா சின்ஹா' ​​முதலிடம்

பீகாரின் பிரபல நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா ​​இன்று செவ்வாய்க்கிழமை காலை கூகுள் தேடலில் டாப் ட்ரெண்டிங் டாப்பிக்காக இருந்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
Sharda Sinha tops Google search trends as folk singer gets admitted to AIIMS tamil news

பாடகி சாரதா சின்ஹா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

பீகாரின் பிரபல நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா (72). அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில், பீகாரின் பிரபல நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா ​​இன்று செவ்வாய்க்கிழமை காலை கூகுள் தேடலில் டாப் ட்ரெண்டிங் டாப்பிக்காக இருந்து வருகிறார். அவரது உடல்நிலை சரியில்லாத செய்தி சாத்தா பூஜை பண்டிகைகளுக்கு முன்னதாக வந்திருப்பதால், அவர் குறித்த கூகுள் தேடல்கள் மணிக்கு மணிக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. ட்ரெண்ட்ஸ் கூகுள் (trends.google) இணைய பக்கத்தின்படி, 12 மணி நேர இடைவெளியில் 20,000 க்கும் மேற்பட்ட தேடல்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேடல் அளவு 1000 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Sharda Sinha tops Google search trends as folk singer gets admitted to AIIMS

பாடகி சாரதா சின்ஹா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் தான், அவரது கணவர் பிரிஜ்கிஷோர் சின்ஹா ​​இறந்த செய்தி வெளியானது. அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்போது அவரது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரலையில், மகன் அன்ஷுமன் தனது தாயின் உடல்நிலை குறித்த அப்டேட்டை அளித்துள்ளார்.

‘பீகார் கோகிலா’ என்று அன்புடன் அழைக்கப்படும் பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷண் விருது பெற்ற பாடகி சாரதா சின்ஹா, தனது கணவர் பிரிஜ் கிஷோர் சின்ஹாவின் மறைவுக்குப் பிறகு அதிர்ச்சியில் ஆழ்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

அவரது மகன் அன்ஷுமன் தனது யூடியூப் சேனலில், “உண்மைதான், என் அம்மா வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். என் அம்மா கடுமையாக போராடுகிறார். இது மிக மிக கடினம். அவர் அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். இதுதான் தற்போதைய உண்மையான நிலவரம். நான் அவரைச் சந்தித்தேன். சாத்தி மையா அவரைக் காப்பாற்றட்டும். மருத்துவர்களை சந்தித்தபோது, ​​திடீரென அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவித்தனர். எல்லோரும் முயற்சி செய்கிறார்கள். ” என்று அவர் கூறியுள்ளார். 

சாரதா சின்ஹா ​​போஜ்புரியில் பாரம்பரிய திருமண மற்றும் சத் பாடல்களை பாடுவதில் பிரபலமானவர். ஓ.டி.டி தொடரான ​​மகாராணி சீசன் 2 க்காக நிர்மோஹியா என்ற பாடலையும் பாடியுள்ளார்.

Viral News Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment