சசி தரூரின் சமீபத்திய பதிவு, எக்ஸ் சமூக ஊடக பயனர்களின் இதயங்களை வென்றுள்ளது. தனது மடியில் சுகமாக இருக்க முடிவு செய்த குரங்குடனான ஒரு மகிழ்ச்சியான சந்திப்பை நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் பகிர்ந்து கொண்டார். குரங்கு வாழைப்பழம் சாப்பிட்டது, அவரை கட்டிப்பிடித்தது, மார்பில்கூட ஓய்வெடுத்தது போன்ற அனுபவத்தை தரூர் தொடர்ச்சியாக புகைப்படங்களில் விவரித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: ‘God’s favourite child’: Shashi Tharoor’s post on ‘extraordinary experience’ with a monkey goes viral
சசி தரூர் அந்த பதிவில் கூறுகையில், “இன்று ஒரு அசாதாரண அனுபவம் கிடைத்தது. நான் தோட்டத்தில் அமர்ந்து காலை செய்தித்தாள்களைப் படித்துக் கொண்டிருந்த போது, ஒரு குரங்கு அலைந்து, நேராக என்னை நோக்கி வந்து என் மடியில் நின்றது. நாங்கள் அதற்கு வழங்கிய ஓரிரு வாழைப்பழங்களை பசியுடன் சாப்பிட்டது, என்னைக் கட்டிப்பிடித்து, என் மார்பில் தலை வைத்து தூங்கியது. நான் மெதுவாக எழுந்திருக்க ஆரம்பித்தேன், அது குதித்து இறங்கியது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் குரங்கு வாழைப்பழங்களை சாப்பிடுவது முதல் கட்டிப்பிடிப்பது வரை என பல தருணங்களில் எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த பதிவில், சசி தரூர் கூறுகையில், “முதலில், குரங்கு அருகில் இருப்பதைக் கண்டு பயந்தேன். வனவிலங்குகள் மீதான மரியாதை நம்மில் வேரூன்றியிருக்கிறது, எனவே குரங்கு கடித்தால் (ரேபிஸ் ஷாட்கள் தேவைப்படும்) ஆபத்து பற்றி நான் கொஞ்சம் கவலைப்பட்டாலும், நான் அமைதியாக இருந்தேன், அது அச்சுறுத்தல் இல்லாமல் இருப்பதை வரவேற்றேன். எனது நம்பிக்கை வலுப்பெற்றது, எங்கள் சந்திப்பு முற்றிலும் அமைதியாகவும் மென்மையாகவும் இருந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அவர் எழுதினார்.
இந்த பதிவைப் பாருங்கள்:
Had an extraordinary experience today. While i was sitting in the garden, reading my morning newspapers, a monkey wandered in, headed straight for me and parked himself on my lap. He hungrily ate a couple of bananas we offered him, hugged me and proceeded to rest his head on my… pic.twitter.com/MdEk2sGFRn
— Shashi Tharoor (@ShashiTharoor) December 4, 2024
இந்த எதிர்பாராத, மனதை நெகிழச் செய்யும் இந்த பதிவைக் காண, சசி தரூரின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்திற்கு நெட்டிசன்கள் பலர் படையெடுத்ததால் இந்த பதிவு விரைவாக வைரலானது.
குரங்குடனான அசாதாரண அனுபவம் குறித்து சசி தரூரின் பதிவு குறித்து ஒரு பயனர் எழுதினார், “டாக்டர் சசி தரூரின் அமைதியான நடத்தையை வனவிலங்குகள் கூட நம்புகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர் கருத்துத் தெரிவிக்கையில், “இது மிகவும் இனிமையானது. நகர்ப்புற குரங்குகளுடன் மிகவும் சிக்கலான சந்திப்புகளைப் பற்றி ஒருவர் பொதுவாகக் கேள்விப்பட்டிருப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது பயனர் எழுதினார், "கடவுளுக்கு பிடித்த குழந்தையாக அது எப்படி இருக்கிறது?” என்று குறிப்பிட்டிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.