“இதை அனுமதிக்கக் கூடாது”: வாஷிங்டனில் தூதரக சந்திப்பில் ஷஷி தரூரை கேள்வி கேட்ட மகன்; நெட்டிசன்கள் கிண்டல்

Shashi Tharoor son diplomatic meet: வாஷிங்டனில் நடைபெற்ற இந்திய தூதரக நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் எதிர்பார்க்காத ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்தது. நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்த காங்கிரஸ் எம்.பி. ஷஷி தரூரிடம், வெளிநாட்டு தூதுவர்கள் அல்ல, அவருடைய சொந்த மகன் கேள்வி எழுப்பினார்.

Shashi Tharoor son diplomatic meet: வாஷிங்டனில் நடைபெற்ற இந்திய தூதரக நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் எதிர்பார்க்காத ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்தது. நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்த காங்கிரஸ் எம்.பி. ஷஷி தரூரிடம், வெளிநாட்டு தூதுவர்கள் அல்ல, அவருடைய சொந்த மகன் கேள்வி எழுப்பினார்.

author-image
WebDesk
New Update
shashi

நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்கள், வெளிநாட்டு கொள்கை நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் திரண்டிருந்தனர். அப்போது ஒரு குரல் ஷஷி தரூரின் கவனத்தை ஈர்த்தது. அந்த குரல் அவரின் மகன், இஷான் தரூருடையது

Shashi Tharoor son diplomatic meet: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ பன்னாட்டு விழிப்புணர்வு முயற்சியின் போது, வாஷிங்டனில் நடைபெற்ற இந்திய தூதரக நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் எதிர்பார்க்காத ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்தது. நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்த காங்கிரஸ் எம்.பி. ஷஷி தரூரிடம், வெளிநாட்டு தூதுவர்கள் அல்ல, அவருடைய சொந்த மகன் கேள்வி எழுப்பினார்.

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment

நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்கள், வெளிநாட்டு கொள்கை நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் திரண்டிருந்தனர். அப்போது ஒரு குரல் ஷஷி தரூரின் கவனத்தை ஈர்த்தது. அந்த குரல் அவரின் மகன், இஷான் தரூருடையது — தி வாஷிங்டன் போஸ்ட்டில் உலகளாவிய விவகாரங்கள் பற்றி எழுதும் கட்டுரையாளர்.

சிரித்தவாறும், சற்று கலகலப்பாகவும் ஷஷி தரூர், “இதை அனுமதிக்கக் கூடாது! இது என் மகன்” என்று சொன்னபோது, அறையில் சிரிப்புப் பெருக்கெடுத்தது.

இஷான் தரூரும் இந்த காட்சியை நயமாக சமாளித்து, “இஷான் தரூர், வாசிங்டன் போஸ்ட். தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வி கேட்கிறேன். முக்கியமாக நீங்கள் அடுத்த நிகழ்வுக்கு போகும் முன் ‘ஹாய்’ சொல்வதற்காக” எனச் வேகமாக அறிமுகப்படுத்தினார்.

Advertisment
Advertisements

அந்த நேரத்தில், பல இந்திய குடும்பங்களில் நடப்பதுபோல், ஷஷி தரூர் தந்தையாக மாறி, மகனை மைக்ரோஃபோனை உயர்த்தச் சொல்லிச் சைகை செய்தார் – இது உடனே இணையத்தில் வைரலானது.

வாழ்த்துகளில் நகைச்சுவை இருந்தாலும், கேள்வியில் இருந்தது கடுமையான சிக்கல்.

இஷான் கேட்ட கேள்வி: பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்புக்கு ஆதாரங்களை வெளிநாட்டு அரசுகள் கேட்கிறார்களா? என்று கேட்டார்.

ஷஷி தரூர் புன்னகையோடு பதிலளித்தார்: “நீ கேட்ட கேள்விக்கு நன்றி, இஷான். இதை நான் முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்யவைக்கவில்லை. இது என் மகன் வழக்கமாக என்கிட்ட பண்ணுவான்.” என்று கூறினார்.

தீவிரமான பதிலில், ஷஷி தரூர் கூறினார், “ஏதேனும் ஆதாரங்களை வெளியுநாடுகள் எதுவும் கேட்கவில்லை. சில ஊடகங்கள் மட்டுமே கேள்வி எழுப்பின. இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதற்குப் பின்னால் தகுந்த ஆதாரங்கள் இருந்தன.”

அவருடைய பதிலில் 37 ஆண்டுகளாகக் கடந்து வந்த எல்லைக் கடந்த தீவிரவாத சம்பவங்கள், 26/11 தாக்குதல், ஒசாமா பின் லேடன் விவகாரம் ஆகியவை முக்கியமான ஆதாரங்களாகவும், பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்துவரும் செயல்களாகவும் எடுத்துரைக்கப்பட்டன. “தீவிரவாதிகளை அனுப்புவார்கள்; பின்னர் அவர்கள் கையும் களவுமாகப் பிடிக்கப்படும்வரை மறுப்பார்கள்” என அவர் குற்றம்சாட்டினார்.

அமெரிக்க மத்தியஸ்தம் குறித்து, “மத்தியஸ்தம் என்ற வார்த்தையை இந்தியா ஏற்க விரும்பவில்லை. இது சமமற்ற சூழலை சமமாக காட்டுவது. தீவிரவாதிகளும், அவர்களால் பலியாகுபவர்களும் சமமாக இருக்க முடியாது” என்றார்.

தாக்குதலுக்குப் பிறகு, உயர் நிலை அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவுடன் தொடர்பு கொண்டதை அவர் உறுதிப்படுத்தினார். ஆனால், “அவர்கள் யாரை அழைத்துக் கூப்பிட வேண்டும் என்றால் அது பாகிஸ்தானே” என வலியுறுத்தினார்.

தந்தை மகனுக்கிடையேயான இந்த நேரம் — புத்திசாலித்தனமும், நயத்தாலும், ஒரு சாதாரண இந்திய குடும்பத்தின் அத்தாட்சியாகவும் — இணையத்தில் பலரையும் கவர்ந்தது.

ஒரு நெட்டிசன் இதை “Classic Indian dad moment” (இந்திய அப்பாவின் உன்னதமான தருணம்) என வர்ணித்தார். மற்றொருவர், “மைக்ரோஃபோனை உயர்த்து – பெற்றோர் ஸ்டைல்” என்று குறிப்பிட்டார்.
ஒரு கிரிக்கெட் ரசிகர், “அர்ஜுன் டெண்டுல்கர் சச்சினுக்கு பந்துவீசுற மாதிரி இது” என பதிவிட்டார்.

மற்றொருவர் அதை தெளிவாக “மகன் ஒரு அடி பாய்ந்தால், அப்பா பத்து அடி பாய்வார்!” என சொலவடை பாணியில் கருத்து தெரிவித்துள்ளார்.

Shashi Tharoor

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: