மண்ணோடு புதைந்த மனிதநேயம்.. ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது தார் ரோடு போட்ட கொடூரம்!

புகைப்படம் பார்ப்பவர்களுக்கும் கண்ணீரை வர வைத்துள்ளது.

ஆக்ராவில் சாலை சீரமைப்பின் போது ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது தார் ரோடு போட்ட சம்பவத்தில் பல்வேறு தரப்பினரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

ஆக்ராவில் சர்க்கியூட் ஹவுஸ் மற்றும் தாஜ்மகால் நோக்கி அமைந்திருக்கும் சாலையில் சாலை சீரமைப்பு பணி நடைப்பெற்று வருகிறது. இரண்டு தினங்களுக்கு இரவில் இந்த சாலையில் தார் ரோடும் பணி நடைப்பெற்றது. அப்போது சாலையில் ஒரத்தில் தெரு நாய் ஒன்று படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளது.

அப்போது, கட்டுமானத் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்த நாயை விரட்டாமல் அதன் மீது கொதிக்கும் தாரை ஊற்றி ரோடு போட்டுள்ளனர். சூடு தாங்க முடியாமல் நாய் அலறியுள்ளது. நாயின் காலில் தார் ஒட்டிக் கொண்டதால் அங்கிருந்த நகர முடியாமல் தவித்துள்ளது.இதை கொஞ்சம் கூடம் கவனிக்காத கட்டுமானத் தொழிலாளர்கள், தார் ரோடு மீது ரோட் ரோலர் ஏற்றி சாலையை சரிசெய்துள்ளன. இதனால் அந்த நாய் துடித்தபடியே இறந்து போயியுள்ளது.

இந்த சம்பவத்தை கண்ட பொது மக்கள், தார் ரோட்டிற்கு அடியில் நாய் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். அடுத்த சில மணி நேரத்திலியே இந்த புகைப்படம் வைரலானது. இதைப் பார்த்த மக்கள் பலரும் இந்த கோடூர செயலில் ஈடுப்பட்ட பணியாளர்களை கடுமையான விமர்சித்துள்ளனர். மேலும், அஜாக்கிரதையாக செயல்பட்ட ஊழியர்கள் மீது நட்வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே நாயை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆக்ராவின் சதார் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விலங்கு நல ஆர்வலர்களும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தார் ரோட்டில் பாதி உடல் புதைத்தப்படி நாய் இறந்து கிடக்கும் புகைப்படம் பார்ப்பவர்களுக்கும் கண்ணீரை வர வைத்துள்ளது.

×Close
×Close