New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/07/DSC02610-38.jpg)
shocking video internet
பொதுமக்கள் பயத்தில் வெளியில் வரமால் உள்ளே பதுங்கி இருந்துள்ளனர்.
shocking video internet
shocking video internet : மஹாராஷ்டிராவில் சாக்கடைக்குள் முதலை ஒன்று கிடந்ததை பார்த்து மக்கள் அலறியடித்து ஓடிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த வாரம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக கடலோர மாவட்டமான ரத்னகிரியில் உள்ள சிப்லூர் என்ற சுற்றுலா தலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்தது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 8 அடி நீளமுள்ள முதலை ஒன்று ரோட்டு சாக்கடையில் கிடந்ததை பொதுமக்கள் கண்டு பயத்தில் உறைந்தனர்.
ரத்னகிரி பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்திருந்த நிலையில் தற்போது நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பியிருக்கிறது. இந்த நேரத்தில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பல்வேறு உயிரினங்கள் ரோட்டில் தென்பட தொடங்கியுள்ளன.
போதை ஆசாமியின் கொடூர செயல்...பாம்பை கடித்து துப்பி பழி தீர்த்தார்.
சிப்லானில் மக்கள் நடமாடும் பகுதி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 8 அடி நீள முதலை ஒன்று உயிருடன் கிடந்தது. இதை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் முதலையை பத்திரமாக கால்வாயிலிருந்து மீட்டார்கள்.
வஷித்ரி நதியிலிருந்து இந்த முதலை இந்த பகுதிக்குள் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது இந்த முதலை ஆற்றில் விடப்பட்டு விட்டது. இதுக்குறித்து வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு முதலே சாக்கடையில் இருந்து விசித்திரமான குரல்கள் கேட்க தொடங்கியுள்ளன.
இதைக் கேட்ட பொதுமக்கள் பயத்தில் வெளியில் வரமால் உள்ளே பதுங்கி இருந்துள்ளனர். விடிந்ததும் கால்வாயை எட்டி பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.