திக் திக் வீடியோ: மழை வெள்ளத்தில் நாயை வேட்டையாட முயன்ற முதலை!

தண்ணீரில் ஏதோ இருப்பதை சுதாரித்துக் கொண்ட அந்த நாய்கள் ஓட்டம் பிடித்தன.

shocking video
shocking video

shocking video : குஜராத்தில் சாலையில் தேங்கிக் கிடந்த மழை வெள்ளத்தில் பதுங்கியிருந்த முதலை ஒன்று நாயை வேட்டையாட முயன்ற திக் திக் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்குள்ள வதோதராவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து தாழ்வான பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பல்வேறு பகுதி வெள்ளநீரால் மிதக்கிறது.

மழையால் ஏற்பட்டு முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை மழை குறைவால் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கின்ற சூழலில் அங்குள்ள மக்களுக்கு அடுத்த பிரச்சனை உருவாகிள்ளது.கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள விஷ்வாமித்திரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது.

வெள்ளப்பெருக்கால் ஆற்றிலிருந்து அடித்துவரப்பட்ட முதலைகள் தெருக்களில் சுற்றித் திரிவது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.கனமழையால் நீர் நிலையிலிருந்து வெளியேறிய முதலை ஒன்று, லால்பாக் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அங்கு வீட்டின் வெளியே தேங்கிய வெள்ளத்தில் நாய்கள் நிற்பதை கண்ட முதலை தண்ணீருக்குள்ளே பதுங்கி நாயை வேட்டையாட முயன்றது. ஆனால் தண்ணீரில் ஏதோ இருப்பதை சுதாரித்துக் கொண்ட அந்த நாய்கள் ஓட்டம் பிடித்தன.

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ ட்விட்டரில் வெளியாகியது. பார்ப்பதற்கே பதற்றத்தை தரும் திக் திக் காட்சிகள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் நாய்கள் தப்பித்தை எண்ணி சந்தோஷம் அடைந்துள்ளனர்.

இதை போலவே வெளியான மற்றொரு வீடியோவில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை இரவு நேரத்தில் சாலையில் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் நடமாட்டம் இல்லாததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Shocking video vadodara rains viral video

Next Story
எல்லா புகழும் பைலட்டையே சாரும்.. மேகத்தை கிழித்துக் கொண்டு வந்த விமானம் வீடியோ!Emirates flight landing video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com