புலியுடன் செல்ஃபி... இந்திய சுற்றுலாப் பயணியை ஆக்ரோஷமாக தாக்கிய புலி; வைரல் வீடியோ!

தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில், இந்திய சுற்றுலாப் பயணியை புலி தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. புலியிடம் செல்ஃபி எடுக்க முயன்றபோது தாக்கப்பட்ட வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில், இந்திய சுற்றுலாப் பயணியை புலி தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. புலியிடம் செல்ஃபி எடுக்க முயன்றபோது தாக்கப்பட்ட வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
selfie-with-a-tiger

புலியுடன் செல்ஃபி... இந்திய சுற்றுலாப் பயணியை ஆக்ரோஷமாக தாக்கிய புலி; வைரல் வீடியோ!

தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில், இந்திய சுற்றுலாப் பயணியை புலி தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. புலியிடம் செல்ஃபி எடுக்க முயன்றபோது தாக்கப்பட்ட வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகிறது. இந்த சம்பவம், தாய்லாந்து நாட்டில் நடந்திருந்தாலும், இதில் பாதிக்கப்பட்டது இந்திய சுற்றுலாப் பயணிதான். இந்தியர்கள், அதிகம் சுற்றுலா செல்லும் இடமாக உள்ளது தாய்லாந்து. அழகிய கடற்கரைகள், அரண்மனைகள், மசாஜ் நிலையங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் இங்கு உள்ளன. Tiger Kingdom என்ற இடம் காலை 9 முதல் 5 மணி வரை மக்கள் பார்வைக்காக திறந்திருக்கிறது. இங்கு, சுற்றுலாவிற்கு வருபவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து புலிகளுடன் நேரம் செலவிடலாம். புலியுடன் போட்டோ எடுத்து கொள்வதற்கும், அவற்றின் மேல் கைப்போட்டு விளையாடுவதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்கள் விருப்பப்பட்டால் அவற்றிற்கு உணவும் கூட வழங்கலாம். தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் அங்கு சென்ற ஒரு இந்திய சுற்றிலா பயணிக்குதான் அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.

Advertisment

தாய்லாந்து புக்கெட் என்ற இடத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 25 வினாடிகள் அடங்கிய அந்த வீடியோவில், முதலில் அந்த இந்திய சுற்றுலாப் பயணி புலி நடந்து செல்லும் போது அதன் அருகில் நடந்து செல்வது பதிவாகியிருக்கிறது. அந்த புலியின் கையில் கட்டியிருக்கும் கயிற்றையும் அவர்தான் வைத்திருக்கிறார். பின்னர், புலிக்கு நிகராக மண்டியிட்டு அமர்கிறார். புலியை கண்காணிக்கும் பாதுகாவலர், புலியை அமர சொல்லி கொம்பை வைத்து மிரட்டுகிறார். இதையடுத்து, உருமிய அந்த புலி, சுற்றுலாப் பயணியை ஆக்ரோஷமாக தாக்குகிறது.

பின்னர் வீடியோ எடுக்கும் நபரும், புலியின் பாதுகாவலரும் புலியை கட்டுப்படுத்த முயற்சிப்பது பதிவாகி இருக்கிறது. புலியால் தாக்கப்பட்ட நபர் கதறுவதும், அவரை காப்பாற்ற பிறர் முயற்சி செய்யும் ஆடியோக்களும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. சுற்றுலா பயணியை  புலி தாக்கிய வீடியாே X, இன்ஸ்டாகிராம், பேஸ் புக் என அனைத்து தளங்களிலும் வைரலானது. இதை பார்த்த மக்கள், புலியால் தாக்கப்பட்ட அந்த நபருக்கு என்ன ஆனாதோ, ஏதானதோ என்று கவலை கொண்டனர். இதனால், அவர் பத்திரமாக இருக்கிறாரா என்றும் சிலர் கேட்டு வந்தனர். அந்த நபருக்கு, புலி தாக்கியதால் பெரிதளவு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் உயிருக்கும் ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது.

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: