/indian-express-tamil/media/media_files/JEKhqRZdHcxlOMkd9zAt.jpg)
ஸ்ரேயா கோஷல் அன்பு மழை பொழிந்த ரித்தி மற்றும் சித்தி ஆகிய 2 கன்றுக்குட்டிகள் நுட்பமான எம்ப்ராய்டரியுடன் அழகான துணி அணிந்திருப்பது வீடியோவில் இடம்பெற்றுள்ளது. (Image source: @shreyaghoshal/Instagram)
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் நட்சத்திர திருமண விழாக்களில் நேரலையில் பங்கேற்ற பல பிரபலமான கலைஞர்களில் பாடகி ஸ்ரேயா கோஷலும் ஒருவர். பாடகி ஸ்ரேயா கோஷல் செவ்வாய்கிழமை அம்பானி வீட்டு திருமண விழாவில், ரித்தி மற்றும் சித்தி ஆகிய 2 கன்றுக்குட்டிகளுடன் விளையாடும் அழகான வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இந்த வைரல் வீடியோவில், கன்றுகள் சிவப்பு நிற வெல்வெட் ஜாக்கெட்டுகளை நுட்பமான எம்பிராய்டரியுடன் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. ஸ்ரேயா கோஷல் கன்றுகளை மெல்ல மெல்ல தடவி கொடுப்பதைப் பார்க்க முடிகிறது.
“கடந்த சில நாட்களில் நடந்த அழகான விஷயம் இதுதான். ரித்தி - சித்தி மிகவும் அழகான கன்றுக்குட்டிகள்” என்று பாடகி ஸ்ரேயா கோஷால் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதும் சமூக ஊடக பயனர்கள் கருத்து தெரிவிக்க குவிந்தனர். ஒரு பயனர் கூறினார், “அவைகளால் வெளிப்படுத்த முடியவில்லை, ஆனால், உண்மையில் அவைகள் மிகவும் மகிழ்ச்சியாகவும் அதிர்ஷ்டசாலிகளாகவும் இருந்தன.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர் எழுதியுள்ளார், “இது நான் இந்த ஆண்டு முழுவதும் பார்த்த மிகவும் ஆரோக்கியமான வீடியோ.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இரண்டு கன்றுகளுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டனர். ஏனெனில், விலங்குகள் வாழ்க்கையில் நல்வாழ்வையும் தூய்மையையும் தருகிறது என்று நம்பப்படுகிறது. 2023-ல், இந்த தம்பதியினர் தங்கள் நிச்சயதார்த்த விழாவிற்கு முன்பு பசுக்களுக்கு ‘குர் லப்சி’ ஊட்டினார்கள். இருவரும் நத்வாடாவில் உள்ள ஒரு கௌஷாலாவில் ஆன்மீக நேரத்தை செலவிட்ட்னர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆடம்பரமாக நடைபெற்ற அம்பானி வீட்டு திருமணத்தின் பல வீடியோக்களில், பனாரசி சில்க் ப்ரோகேட் ஜாக்கெட்டில் அம்பானியின் செல்ல நாய் 'ஹேப்பி'யின் வீடியோ சமூக ஊடகங்களில் கவனத்தைப் பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.