/tamil-ie/media/media_files/uploads/2020/01/New-Project-2020-01-15T232646.502.jpg)
singer and dog singing, singer and dog singing viral video, நாய் பாடும் பாடல், வைரல் வீடியோ, dog singing viral video, dog singing, teri meri kahani song, viral video, ranu mondal
பிரபல இந்தி பாடகி ரானு மோன்டால் பாடிய தேரி மேரி கஹானி பாடலை, ஒருவர் ஆர்மோனியத்துடன் பாட அவருடன் சேர்ந்து நாய் ஒன்று பாடுகிற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஓர் ஆண்டுக்கு முன்பு ரயிலில் பாட்டு பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் பாடகி ராணு மோண்டால். இவர் தொழில்முறை பாடகி இல்லை. ஆனால், ராணு மோண்டால், மேற்குவங்கத்தில் உள்ள ராணாகாட் ரயில் நிலையத்தில், பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலைப் பாடி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.
அவர் இனிமையாகப் பாடுவதைப் பார்த்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியதை அடுத்து ராணு மோண்டால் ஒரே இரவில் பிரபலமானார்.
அதன் பிறகு, பிரபல டிவி சேனல் ஒன்று அவருக்கு பாடுவதற்கான மேடை வழங்கியது. தற்போது அவர் தொழில்முறை பாடகியாக விஸ்வரூபமெடுத்துள்ளார்.
இதையடுத்து, அவருக்கு பிரபல இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா, தன்னுடைய படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு வழங்கினார். அதன் பிறகு ராணு மோண்டால், ‘ஹாப்பி ஹார்டி அன்ட் ஹீர்’ படத்தில் ‘தேரி மேரி கஹானி’ என்றப் பாடலைப் பாடியதன் மூலம் நாடு முழுவதும் அறியப்பட்டார்.
அதோடு, பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் ராணு மோண்டாலுக்கு தான் இசையமைக்கும் பாலிவுட் படத்தில் பாடல் பாட வாய்ப்பு தந்தார்.
இப்படி பாடகரும் பாடகியும் பிரபலமான தேரி மேரி கஹானி பாடலை ஒருவர் ஆர்மோனியம் வாசித்துக்கொண்டு பாட அவர் வளர்க்கும் நாயும் அவருடன் சேர்ந்துகொண்டு பாடுகின்றது. இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.