New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/06/y3y3KhflQBL0Jsk3aDiZ.jpg)
மதுரை முத்து சொன்ன கடி ஜோக்குகளுக்கு எல்லாம் பாடகி சித்ரா பதில் கொடுத்து ஓடவிட்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை முத்து சொன்ன கடி ஜோக்குகளுக்கு எல்லாம் பாடகி சித்ரா பதில் கொடுத்து ஓடவிட்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியில் நகைச்சுவைக் கலைஞர் மதுரை முத்துவின் கடி ஜோக்குகளுக்கு பாடகி சித்ரா பதில் கொடுத்து காமெடியில் மதுரை முத்துவையே ஓடவிட்டு கலாய்த்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி. இதில் சிறுவர்கள் வியக்க வைக்கும் வகையில் பாடி அசத்தி வருகின்றனர். இதனால், இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி 10-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை ம.பா.க. ஆனந்த், பிரியங்கா தொகுத்து வழங்குகின்றனர். பாடகி கே.எஸ்.சித்ரா, பாடகர் மனோ ஆகியோர் நடுவர்களாக இருந்து மதிப்பிட்டு வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்துவதற்காக நகைச்சுவைக் கலைஞர்களும் பங்கேற்று பெர்ஃபார்ம் செய்து வருகின்றனர். அந்த வகையில், நகைச்சுவை கலைஞர் மதுரை முத்து பங்கேற்று காமெடி செய்துள்ளார். ஆனால், மதுரை முத்து சொன்ன கடி ஜோக்குகளுக்கு எல்லாம் பாடகி சித்ரா பதில் கொடுத்து ஓடவிட்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் மதுரை முத்து ஒரு கேரளாவைச் சேர்ந்தவர் போல, கெட் அப் போட்டுக்கொண்டு வந்து, கடி ஜோக்குகளை கூறுகிறார். அதாவது, ஒருவன் ஸ்கூலுக்கு ஒருநாள் விட்டு, ஒருநாள் ஸ்கூள் வந்திருக்கின்றான். அவன் பெயர் என்ன என்று கேட்கிறார். அதற்கு பாடகி சித்ரா டேவிட் (day vid - நாள் விட்டு) என்று பதில் கூறுகிறார். இதைக் கேட்டு, மதுரை முத்து, நீங்கள் சாங் பயிற்சி எடுக்கிறதுக்கு பதில், காமெடிக்கு பயிற்சி எடுக்கிறீங்க என்று கூறுகிறார்.
அதே போல், மதுரை முத்து இன்னைக்கு என்ன டே என்று கேட்க பாடகி சித்ரா டுடே என்று பதிலளிக்க, மதுரை முத்து துண்டைப் போட்டுவிட்டு அய்யயோ, என் பொழப்பே போச்சு என்று கூறுகிறார்.
அதுமட்டுமில்லாமல், பாடகி சித்ரா, ஒரு புள்ளி ஒரு காம் ஆக வந்தால் என்ன சொல்வீங்க என்று கேட்க, மதுரை முத்து தெரியவில்லை சொல்லுங்க மேடம் என்று கூற சித்ரா, டாட் காம் என்று கூறி நகைச்சுவை செய்கிறார். இதைக் கேட்டு மதுரை முத்து அசந்துபோகிறார்.
ஒருத்தன் சைக்கிளில் போகிறான், சைக்கிளில் பிரேக் இல்லை. என் சைக்கிளைப் பிடி என்ன காப்பாத்து என்பதை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்று மதுரை முத்து கேட்க, பாடகி சித்ரா, என்சைக்கிளோபிடியா என்று கூறி நகைச்சுவையாக மாற்றுகிறார்.
இதைக் கேட்ட, மதுரை முத்து, சைதாப்பேட்டையில் பிளம்பிங் வேலை இருக்கு, நான் அங்ககூட போய் பொழைச்சுக்கிறேன் மேடம் என்று கூறுகிறார். அப்போது, டி.ஜே. ‘இவன் வசம் இருந்தது ஏழு வரம், ஏழும் இன்று தீர்ந்தாச்சு’ என்ற பாடலைப் போட மதுரை முத்து தலையில் துண்டு போட்டுக்கொன்டு போகிறார். இப்படி பாடகி சித்ரா, நகைச்சுவை கலைஞர் மதுரை முத்துவையே காமெடியில் ஓட விட்டிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.