வீடியோ : இவரை தயவு செய்து கண்டுபிடித்து கொடுங்கள் : ஷங்கர் மகாதேவனின் தீவிர வேட்டை

கேரளாவில் வசிக்கும் இளைஞர் ஒருவரை பாடகர் ஷங்கர் மகாதேவன் தீவிரமாக தேடி வருகிறார். இந்த தேடுதலின் சாட்சியாக தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்

கேரளாவில் வசிக்கும் இளைஞர் ஒருவர் சமீபத்தில் பாடகர் ஷங்கர் மகாதேவன் பாடல் ஒன்றைப் பாடிய வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த இளைஞரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார் சங்கர் மகாதேவன்.

Shankar Mahadevan

விஸ்வரூபம் பாகம் 1 படத்தில் இடம்பெற்றுள்ள ‘உன்னைக் காணாத நான் இன்று நானில்லையே’ என்ற பாடலை வெளிமாநில இளைஞர் ஒருவர் பாடினார். அவர் பாடிய இந்த வீடியோ இணையத்தளம் முழுவதும் வைரலாவதற்கு ஒரே காரணம் அவரின் குரல் வளம். இந்த இளைஞரின் பாடல் அனைவரையும் சொக்க வைக்கும் வகையில் உள்ளது. எவ்வித வாத்தியங்களும் இல்லாமல் பாடும் இந்த இளைஞரின் பாடல் ஷங்கர் மகாதேவனுக்கு சவால் விடும் அளவிற்கு மெய் மறக்கச் செய்கிறது.

Kerala Youth : கேரள இளைஞர்

பாடகர் சங்கர் மகாதேவனை வியக்க வைத்த கேரள இளைஞர் உன்னி

இணையத்தளம் முழுவதும் வைரலான இந்த வீடியோவை சங்கர் மகாதேவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “உழைப்புக்குக் கிடைத்த பரிசு தான் இந்த இளைஞர் பாடும் பாட்டு. யாராவது இவரைக் கண்டுபிடிக்க உதவுங்கள். இவருடன் இணைந்து பாட ஆவலோடு இருக்கிறேன்” என்றுள்ளார்.

மேலும் இந்த வீடியோவில் பாடியுள்ள இளைஞர் கேரளாவை சேர்ந்த ராகேஷ் உன்னி நூரநாடு என்று கண்டறியப்பட்டுள்ளார். மேலும் இவர் ஷங்கர் மகாதேவனின் தீவிர ரசிகர் என்று தெரிய வந்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close