பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர், நடிகை ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் அவர் வெளியேறினாலும், அவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. குறிப்பாக இணைய தளங்களில் ஓவியா ஆர்மி, ஓவியா ஃபேன்ஸ் என ஏராளமான பக்கங்கள் உருவாக்கப்பட்டது.
ஓவியாவுக்கு தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. இலங்கையிலும் ஓவியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். அவர்களில் சிலர் ‘வந்துட்டேனு சொல்லு ஓவியா ஆர்மி’ என்ற பாடலை உருவாக்கி யூட்யூப்பில் பதிவேற்றியுள்ளனர். பதிவேற்றப்பட்ட 4 நாளில் சுமார் 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். இப்போது, இது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.